கேரளாவில் தற்போது பெரும் அரசியல் சர்ச்சை புயலை ஏற்படுத்தியுள்ளது கூட்டுறவு சங்க மோசடி. கேரளா கம்யூனிஸ்ட் CPM கட்டுப்பாட்டில் கருவண்ணூர் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த கூட்டுறவு வங்கியில் கருப்பு பண பரிவர்த்தனை நடந்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இது குறித்து புகார்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் இருக்கும் கூட்டுறவு துறை அமைச்சகத்திற்கு பறந்தது.
இதனை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியது கூட்டுறவு துறை அமைச்சகம் அமலாக்க துறையின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. விசாரணையில் இறங்கிய அமலாக்க துறை பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது. CPM கட்டுப்பாட்டில் உள்ள கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் ரூ .200 கோடி மதிப்புள்ள கருப்புப் பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்க இயக்குநரகத்தின் புதிய தகவல்கள் கண்டறிந்துள்ளது. இந்த கூட்டுறவு வங்கியில் கட்டாய KYC விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதையும் அவர்களின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் போலி ஆவணங்களை பயன்படுத்தி கடன் கொடுத்ததும் அதன் மூலம் கருப்பு பண பரிவர்த்தனை நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை வைத்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நிலம் வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கருவன்னூர் கூட்டுறவு வங்கி மோசடியில் கேரளா சிபிஎம் தலைவர் ஏ.சி மொய்தீனின் உறவினர் சம்பந்தப்பட்ட்டுள்ளது தெரியவந்துள்ளது ; சிபிஎம் தலைவர் ஏ.சி மொய்தீனின் பினாமி என்பது கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக கேரளா அரசியலில் புயல் கிளம்பியுள்ளது. சிபிஎம் கேரள மாநிலக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏசி மொய்தீனின் உறவினர் கருவன்னூர் கூட்டுறவு வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது அமபலமாகி உள்ளதால் எதிர்கட்சிகள் இந்த விசயத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
மேலும் மோசடியில் ஈடுபட்ட ஏ.சி மொய்தீனின் உறவினர் கரீமின் மகன் பிஜு, கூட்டுறவு வங்கியில் மேலாளராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். மோசடி கடன்கள் அவருக்கு சொந்தமான தேக்கடி ரிசார்ட்டின் பெயரில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஎம்மின் நிர்வாகிகள் மற்ற சில உள்ளூர் தலைவர்களும் நிறுவனத்தில் அதன் கூட்டுறவு குழு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கருப்பு பண பரிவர்த்தனைகள் மூத்த சிபிஎம் தலைவர்களின் பினாமியால் செய்யப்பட்டதாகவும், அதனால் கட்சியின் உயரதிகாரிகள் அவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் சிபிஎம் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கியின் குற்றச்சாட்டுகள் பணமோசடிக்கு பயன்படுத்தப்படுகிறது, என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை வங்கியிடம் அறிக்கை கேட்டுள்ளது. 200 கோடி ரூபாய் பரிவர்த்தனை தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது . அமலாக்க துறை.
மேலும் சிபிஎம் சட்டவிரோத நோக்கங்களுக்காக கூட்டுறவு வங்கிகள்/சங்கங்களைப் பயன்படுத்துவதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது இந்த சட்டவிரோத பரிவர்த்தனை. இதே கூட்டுறவு வங்கியில் 100 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளாது கம்யூனிஸ்ட் கட்சி.
இந்த வங்கியில் கோடிக்கணக்கான பினாமி பரிவர்த்தனைகள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியினருக்கு பெரிய அளவிலான கடன்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக ED இன் ஆரம்ப விசாரணை தெரிவிக்கிறது. சிபிஎம்மின் தேர்தல் நிதியாக வங்கியில் இருந்து பெறப்பட்ட பணம் பற்றி ஒரு குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்திய கணக்கீட்டின்படி, கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழல் சுமார் 300 கோடி ரூபாய். இந்த மோசடியின் ஆரம்ப மதிப்பீடு 100 கோடி.
100 கோடி ரூபாய் ஊழல் கேரளாவில் சிபிஎம் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கியைத் தாக்கியது, பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்தது
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை அறிக்கைகளின்படி, கிரண் என்பவர் வாங்கிய கடன் 23 கோடி ரூபாய் அடைத்த பின்பும் அவர் கணக்கில் 23 கோடி ரூபாய் கடன் இருப்பதாக காட்டியுள்ளது. இ இதே போல் 46 பேர் கடன்கள் அடைபட்ட பிறகும் கடன் இருப்பதாக காட்டியுள்ளது, இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் அனைத்து பணமும் கம்யூனிஸ்ட் தேர்தல் செல்வுக்கு செலவிடப்பட்டதும் தெரியவந்துள்ளது,
கேரளாவில் சிபிஎம்மின் முதுகெலும்பாக கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் உள்ளன. எனவே, பல சட்டவிரோத நடவடிக்கைகள் இங்கு நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் துறையில் ஏதேனும் கட்டுப்பாடு வந்தால் தங்களின் கட்சிக்கு நிதி கிடைக்காது என்பதனால் தான் மத்திய அரசு புதியதாக உருவாகியுள்ள கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரகூடாது என சிபிஎம் தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கத் ஆரம்பித்தனரோ.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















