ரூ.3000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கைப்பற்றியது கடற்படை

இந்திய கடற்படை கப்பல் சுவர்ணா, அரபிக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகிக்கும் வகையில் சென்றுக் கொண்டிருந்த மீன்பிடி படகு ஒன்றை வழிமறித்து சோதனையிட்டது. அப்போது அந்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ  போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேல் விசாரணைக்காக, அந்தப் படகு அருகில் உள்ள கேரளாவின் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிடிபட்ட போதைப் பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 3000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்ணன் படத்தை கிழித்து தோங்கவிட்ட நபர் யார் ?

இந்த நடவடிக்கை மிகப்பெரிய அளவு மற்றும் விலை மதிப்புள்ள பறிமுதல் நடவடிக்கை மட்டுமல்ல.  மக்ராவ் கடற்கரையிலிருந்து இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி செல்லும் சட்டவிரோத வழிதடத்தை சீர்குலைக்கும் செயலிலும் இது மிகப் பெரிய நடவடிக்கையாகும்.

Baakiyalakshmi Today Episode 217

போதைப் பொருட்களால் மனிதர்களுக்கு பெரும்  தீங்கு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல்,  போதைப் பொருட்களின் வர்த்தகம், தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் குற்றநடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கிறது.   

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version