இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா தான் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் 1 லட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். மகாராஷ்டிராவில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக விளங்கிய மும்பையின் தாராவி. ஆனால் தற்போது அங்கு நோய் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துள்ளது.
புதுமையான தொடர் பரிசோதனைகள், தனியார் மருத்துவர்களை ஈடுபடுத்துதல், பாதிக்கப்படக்கூடிய மக்களை தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்துவதற்கான பெரிய வசதி மற்றும் தனியார் மருத்துவமனைகளை சிகிச்சைக்காக எடுத்துக்கொள்வது போன்ற உத்திகள் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தி முன் மாதிரியாகியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தாராவியில் களப்பணிகள் செய்தது ஆர்.எஸ்.எஸ் ஆகும்.
ஆசிய கண்டத்தின் மிகவும் நெரிசலான சேரி பகுதி இந்தியாவின் தாராவி. தாராவியில் சுமார் 8.5 லட்சம் மக்கள் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மிக நெருக்கமான குடியிருப்புகளில் வாழ்கின்றனர். சமூக இடைவெளி சாத்தியமற்ற இப்பகுதியில் ஏப்ரல் முதல் தேதி, முதல் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
ஜூன் 12 வரை இங்கு 2,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தினசரி பரவல் மும்பை நகரில் 3% மற்றும் சில வார்டுகளில் 5% ஆக இருக்கும் நிலையில், தாராவியில் இது 1.57% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மே 30 முதல் ஜூன் 8 வரை ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை. ஆனால் கடந்த நான்கு நாட்களில் 4 பேர் இறந்ததால் உயிரிழப்பு 77 ஆகியுள்ளது.
வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதற்காக அதிகாரிகள் ஏப்ரல் முதல் 47,500 வீடுகளுக்கு சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 7,00,000 பேரை பரிசோதித்து காய்ச்சல் கிளினிக்குகளை அமைத்துள்ளனர். அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் விளையாட்டு கிளப்புகளை தனிமை மையங்களாக மாற்றி அறிகுறிகளுடன் தென்படுபவர்களை அங்கு பராமரித்தனர். மே மாதத்துடன் ஒப்பிடும்போது புதிய தினசரி நோய்த்தொற்றுகள் இப்போது மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டன. நோயாளிகளில் 51% பேர் குணமடைந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம்
மும்பை மாநகராட்சியுடன் ஆர்.எஸ்.எஸ், அமைப்பு இணைந்தது. அதற்கு அப்பகுதி மக்கள் கரம் கொடுத்தனர் அங்கு மிகப்பெரிய மருத்துவ கேம்ப்பை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்பாடு செய்தது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தெருத்தெருவாக வீடு வீடாக தெர்மல் ஸ்கிரீனிங் முறையில் நோயறி இயக்கம் நடத்தப்பட்டது . இந்த கேம்ப் மூலம் சுமார் 10800 பேர் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யப்பட்டனர். 200 பேர் கொண்ட இந்த குழுவில் மகளிர் பெரிய எண்ணிக்கையில் பங்கு கொண்டார்கள்
ஒரு மருத்துவர் ; மூவர் தன்னார்வலர்கள் கொண்ட 50 அணிகள் விரைவாக தயாராயின. இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முழு உடல் கவச உடையும் முக கவசமும் சானிடைசர்களும் வழங்கப்பட்டன. இவர்கள் தாராவிக்குள் சென்றார்கள் கொரோனாவில் இருந்து மீள்வது எப்படி என்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.
இந்த மருத்துவ கேம்பில் ஸ்கிரீனிங் நடத்தும் பணிகளில் சேர மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நோயறி இயக்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முடிந்தது என்றால் காரணம் ஆர்எஸ்எஸ்ஸின் அழைப்பின் பேரில் ஊர்க்காரர்கள் மனமுவந்து ஒத்துழைத்தது தான் நோய் பரவாமல் இருப்பதற்கு காரணம் என கூறுகின்றார்கள். இதே போல் சென்னை மக்களும் அரசிற்கு ஒத்துழைத்தால் தொற்றை விரைவில் விரட்டலாம்!