மும்பையில் 1 லட்சம் பேருக்கு உணவு அளிக்கும் RSS…
அன்னபூர்ணா என்ற திட்டத்தின் கீழ்
மும்பை மாநகராட்சியில் 24 வார்டுகளில் உள்ள 1.2 லட்சம் பேருக்கு ஒரு நாளைக்கு
2 வேளை உணவு வழங்கி வருகிறது…. இதற்காக 17 “சமையல் கூடங்கள் இயங்கி வருகின்றன…
கடந்த ஒரு வாரமாக RSS அமைப்பின்
ஜன்கல்யாண் சமிதி மற்றும் கேசவ் ஸ்ருஷ்டி மூலம் 1 லட்சம் பேருக்கு உணவு தயாரித்து வழங்குகிறார்கள்…
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு என்று தினசரி 40,000 உணவு பொட்டலங்களை மும்பை மாநகராட்சிக்கு RSS வழங்கி வருகிறது.
வீடற்றவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு தினசரி 80,000 உணவு பொட்டலங்களை RSS வழங்கி வருகிறது…
ஊரடங்கு அமுலுக்கு வந்த உடனே மும்பை மாநகராட்சி அதிகாரிகளை அணுகி முறையாக அனுமதி பெற்று உணவு வழங்கி வருகிறது RSS…
7,000 க்கும் மேற்பட்ட RSS தொண்டர்கள் இந்த மகத்தான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்…
கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் உஷா சங்கர்.