ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தனது சுற்றுப்பயணங்களின் போது, சமுதாயத்தின் வெவ்வேறு தரப்பினரை சந்திப்பது வழக்கம். டெல்லி கஸ்தூரிபா காந்தி சாலையில் உள்ள மசூதியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் , அகில இந்திய இமாம்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் இமாம் உமர் அஹமது இலியாஸ் அவர்களை சந்தித்து பேசினார்.
இதன் ஒருபகுதியாக மதரசாவில் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது மோகன் பாகவத்தை, ‘ராஷ்ட்ர பிதா’ என குறிப்பிட்டு, தேசத்தின் தந்தை என இமாம் பாராட்டினார். இதை ஏற்க மறுத்த பாகவத், ‘தேசத்தின் தந்தை ஒருவரே. நாம் அனைவரும் இந்த தேசத்தின் குழந்தைகள்’ என்றார்.
அவருடன் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் கிருஷ்ண கோபால், ராம் லால், இந்திரேஷ் குமார் இருந்தனர். சில சிந்தனையாளர்களின் கருத்துக்களை ஆமோதித்த ஸ்ரீ மோகன் பாகவத், ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரின் டி.என்.ஏ. ஒன்றுதான் என்பதை கோடிட்டு காட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, இமாம் உமர் அஹமது இலியாஸ், இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில் ” நான் அழைப்பு விடுத்ததன் பேரில், இன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வந்து சந்தித்தார் அவர் ஒரு தேசப் பிதா, தேசத்தின் ரிஷி. அவரது வருகை புரிந்தது நல்ல செய்தியை அனைவர்க்கும் விடுக்கிறது.
நாம் வழிபடும் தெய்வம் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் மனித நேயம் தான் மிகப்பெரிய மதம். நாடு தான் முதலில் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார் அகில இந்திய இமாம்கள் சங்கம் என்பது இந்திய இமாம்களின் கூட்டமைப்பாகும். இது உலகின் மிகப்பெரிய இமாம்களின் சங்கமாகவும் கருதப்படுகிறது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















