ஆர்எஸ்எஸின் சர்சங்கசாலக் Dr. மோகன்ஜி பகவத் அவர்கள் 26 ஏப்ரல் மாலை 5.00 மணிக்கு “இன்றைய சூழ்நிலை மற்றும் நம் பங்களிப்பு” என்ற தலைப்பில் நேரலையில் பேசுகிறார்
- பத்மநாபன் நாகராஜன்
யூடியூப் மற்றும் முகநூல் வாயிலாக டாக்டர் மோகன்ஜி பகவத் அவர்களின் பேச்சு நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்க்கார்யவாஹ் திரு பையாஜி ஜோஷி அவர்களின் அறிவுரைப்படி நாடு முழுவதிலும் உள்ள ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், ஏழை மக்களுக்கு உணவு, மருந்துப்பொருட்கள், முகக் கவசம் ஆகியவற்றை இலவசமாக அளித்து சேவை செய்து வருகின்றனர்.
அக்ஷய திருதியை அன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள இந்த உரையில், இந்திய தேசம் தற்போது எதிர்கொண்டு வரும் சவாலான சூழ்நிலைகள் பற்றி உரையாற்ற உள்ளார். இந்த சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் சவால்கள் பற்றியும், அதை நாம் எவ்வாறு வாய்ப்பாக மாற்ற முடியும், என்பது பற்றியும் இந்த உரையாடல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரடி உரையாடலில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று நாக்பூர் ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுத்துள்ளது.
சீன வைரஸ் நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், மற்றும் உயிரிழப்பை தடுப்பதற்காகவும் இந்திய அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதையும்; ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உட்பட பல தொண்டு நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து பொதுமக்களுக்கு உதவி வருவதையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு பாராட்டுகிறது.
இந்த சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் சர்சங்ககாலக் டாக்டர் மோகன்ஜி பகவத் அவர்கள் யூடியூப் மூலமும், முகநூல் மூலமும் மக்களிடம் நேரலையாக பேசுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.
நாம் ஒவ்வொருவரும், நம் வீட்டிலேயே அமர்ந்து, குடும்பத்துடன் பூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ மோகன்ஜி பகவத் அவர்களின் உரையை கேட்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நாக்பூர் சார்பாக திரு ராஜேஷ் லோயா, நாக்பூர் மகாநகர் சங்ககாலக் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















