96 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம் 1925-ல் விஜயதசமி நாளில் கேசவ பலிராம் ஹெட்கேவரால் 20 இளைஞர்களுடன் தொடங்கப்பட்டது. 1926-ம் ஆண்டு ஏப்ரல் 17-ல் தான் ராஷ்டிரிய ஸ்வயம் ஸேவக்- ஆர்.எஸ்.எஸ். என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டது.
நேற்று ஆர்.எஸ்.எஸ் இயக்கம் துவக்கப்பட்ட நாளை தொடர்ந்து அதன் தலைவர் மோகன் பாகவத் விஜய தசமி விழா நிகழ்ச்சியில், கலந்து கொண்டார். விவிழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கோவில் நிலங்கள் அரசு நிர்வகிப்பது குறித்து உரை மேற்கொண்டார்
அவர் பேசுகையில்: அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு சில கோவில்கள் மட்டுமே சிறப்பாக செயல்படுகின்றன. அப்படி செயல்படாத கோவில்களின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. பல கோவில் சொத்துக்களில் முறைகேடு நடப்பது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹிந்து கோவில் சொத்துக்களால், ஹிந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லாத பிற மதத்தினர் பலன் அடைகின்றனர். ஹிந்துக்களுக்கு தேவைப்பட்டாலும், அந்த பலன்களை அவர்களால் பெற முடியவில்லை.கோவில்களை நிர்வகிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.
அதில், ‘கோவில்களை அரசு உரிமை கொண்டாட முடியாது. கடவுள் மட்டுமே அதன் உரிமையாளர். பூஜை செய்வோர் நிர்வாகிகளை போன்றவர்கள். ‘அதை, அரசு சில காலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகிக்கலாமே தவிர, உரிமை கோர முடியாது’ என, நீதிபதிகள் தெரிவித்தனர்.எனவே, கோவில்களை நிர்வகிக்கும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும். என பேசியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தற்போது தமிழகத்தில் தான் கோவில் நில பிரச்சனைகள் தலைதூக்கியுள்ளது. மேலும் அவர் பேசுகையில் இந்து கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் அரசு நிலங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இவர் பேசியது தமிழக அரசிற்கு சற்று கிலியை ஏற்படுத்தியுள்ளதாம். மோகன் பகவத் அவர்கள் தமிழகத்தை சுட்டி காட்டும் அளவிற்கு பேசியுள்ளது திமுக சீனியர்கள் மற்றும் கோவில் நிலத்தினை வளைத்து போட்டிருக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆர்.எஸ்.எஸ். ஒரு காரியத்தில் இறங்கியது என்றால் அதை முடிக்காமல் அந்த காரியத்தை விடமாட்டார்கள் என்று அனைவருக்கும் தெரிந்ததே.