மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின் 3 வைத்து படம் ருத்ர தாண்டவம்.
சில வருடங்களுக்கு முன் ஜி. ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘திரௌபதி’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. இதில் நாடக காதலை தோலுரித்து காட்டினார். இயக்குனர் மோகன் அவர்கள்.
திரெளபதி திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது, ஆனால் படம் வெற்றி அடைந்தது வணிகரீதியாகவும் இப்படம் வெற்றியைப் பெற்றது.
திரெளபதி திரைபடத்தில் நாடக காதல் பற்றி தோலுரித்த மோகன் அடுத்த படமாக . தற்போது ருத்ரதாண்டவம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எந்த விதமான சமூக பிரச்சனையை கையில் எடுப்பார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பை கிளப்பியது.
ட்ரெய்லரில் போதை பொருட்களின் பழக்கத்தால் இளம் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் சிறுவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அதனை காவல்துறை அதிகாரியாக உள்ள ரிச்சட் அதனை தடுப்பதுபோல் உள்ளது.
பிசிஆர் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தொடர்பாக இந்தக் கதைக்களம் முழுவதும் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மதமாற்றம் குறித்தும், இந்து மதத்தை இழிவு செய்கிறார்கள் என்பது போன்ற அதிரடி வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் இணையத்தில் ருத்ரதாண்டவம் ட்ரைலர் கலக்கி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பெரிய நடிகர்களை மட்டும் கொண்டாடி வந்த நிலையில் தற்போது ருத்ரதாண்டவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த படம் கடந்த அக்டோபர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் படம் இதுவரை 3 நாட்களில் 7.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.