இந்தியா மற்றொரு மைல்கல் சாதனையாக, தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் அருகே முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயில் என அழைக்கப்படும் ருத்ரேஷ்வரா கோயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இந்த முடிவு நேற்று நடந்த, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய குழுவின் 44வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
காகதிய வம்ச மன்னர்களால், 13ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதமான ராமப்பா கோயிலை உருவாக்கியவர் ராமப்பா. இதை 2019ம் ஆண்டுக்கான, யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடம் பட்டியலில் சேர்க்கும்படி மத்திய அரசு பரிந்துரை செய்தது. 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் சிற்ப வேலைப்பாடுகளுக்கு சிறப்பு பெற்றது. இந்த கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
அதன்படி யுனெஸ்கோ இன்று வெளியிட்ட சுட்டுரை செய்தியில், ‘‘இந்தியாவின் தெலங்கானா பகுதியில் உள்ள காகத்தியா ருத்ரேஷ்வரா (ராமப்பா) கோயில், உலக பாரம்பரிய இடமாக இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. சபாஷ்!’’ என குறிப்பிட்டுள்ளது.
காகத்தியா ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய இடமாக, யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கம்பீரமான இந்த கோயில் வளாகத்துக்கு சென்று, அதன் பிரம்மாண்டத்தின் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என அவர் மக்களை கேட்டுக் கொண்டார்.