ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பின் பேரில் பாரத பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு மாஸ்கோவில் க்ரெம்ளின் மாளிகையில் அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பல முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து இன்று (09.07.2024) நடந்த நிகழ்வில் ரஷ்யா நாட்டின் உயரிய விருதான ‛‛ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ ”விருதை பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு வழங்கி ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் கவுரவித்தார். இந்த விருது கடந்த 2019-ம் ஆண்டு வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இடையில் கோவிட் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.இன்று விருது வழங்கி கவுரவித்தார் ரஷ்ய அதிபர் புடின் என்பது குறிப்பிடத்தக்கது.
எதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திரமோடி நன்றி
இது குறித்து பாரத பிரதமர் நரேந்திரமோடி கூறியது, புடினுக்கு எனது இதயபூர்வ நன்றி. எனக்கு வழங்கப்பட்ட விருது 140 கோடி இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை. இரு நாடுகளிடையேயான பரஸ்பரம், நம்பிக்கை, ஆழமான நட்பு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட மரியாதை என்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















