ஏன்னா அடி..சபரிமலை சென்ற பிந்து அம்மினி மீது மீண்டும் தாக்குதல்! வினை விதைத்தவன் வினை அறுத்தே தீருவான்! viral Video

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் இரு ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.கம்யூனிஸ்ட் கட்சியினரும்,வேறு மதத்தை சேர்ந்தவர்கள் தான் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனைத்து பெண்களுக்கும் செல்ல அனுமதி வழங்கவேண்டும் என வழக்கு கொடுத்தவர்கள். சபரிம லைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையடுத்து, கேரள பெண் செயற்பாட்டாளர் என கூறி கூறி கொண்டு சமூக கலாச்சாரத்தை சீரழித்து வருபவர்களான ரெஹனா பாத்திமா மற்றும் பிந்து என்பவர்கள்தான் கடந்த 2019ஆம் ஆண்டு சபரிமலை கோவிலில் முதன்முதலில் தரிசனம் செய்ய இரண்டு பெண்களில் பிந்து அம்மினி என்பவரும் சென்றார்கள்

பிந்து அம்மினி சபரிமலை சென்ற பிறகு அடிக்கடி அவர் தாக்குதலுக்குள்ளாவது உண்டு.வழக்கறிஞரான அவர், தன்னுடைய வழக்கு தொடர்பாக கோழிக்கோடு சென்றுள்ளார். கோழிக்கோடு வடக்கு கடற்கரைக்கு சென்ற அவரை மர்ம நபர் ஒருவர் கழுத்தை பிடித்து இழுத்து கீழே தள்ளி சராமரியாக அடித்தார்.

2019, ஜனவரியில் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே ஆண்டு திருப்தி தேசாய் சபரிமலை செல்வதற்காகப் பாதுகாப்பு கேட்டு கொச்சி கமிஷனர் அலுவலகம் சென்றிருந்தார். அப்போது அவருடன் சென்ற பிந்து அம்மினி மீது ஒருவர் பெப்பர் ஸ்பிரே அடித்துத் தாக்குதல் நடத்தினார். சபரிமலைக்குச் சென்று வந்த பிறகு வழக்கறிஞரான பிந்து அம்மினி மீது அடிக்கடி தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன.

கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியில் சென்றுகொண்டிருந்த பிந்து அம்மினிமீது கடந்த மாதம் திடீரென ஆட்டோ ஒன்று மோதியது. இதனால் காயமடைந்த பிந்து சில நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினார். தன்மீது வேண்டுமென்றே ஆட்டோவை மோதியதாக அப்போது தெரிவித்திருந்தார் பிந்து. இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார் பிந்து அம்மினி. அதில் வெள்ளை வேட்டியும், கறுப்புச் சட்டையும் அணிந்த ஒருவர் பிந்து அம்மினியைத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி வைரலானது . பிந்து கூறுகையில், தனக்கு ஏதாவது நடைபெறும் என்று உள் மனது சொன்னதாகவும் அதனால், கொயிலாண்டி போலீசாரிடத்தில் பாதுகாப்பு கேட்டதாவும் ஆனால், அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், தன்னை தாக்கிய நபரை கைது செய்துள்ள போலீசார் ஜாமீனில் வெளிவரக் கூடிய சாதாரண வழக்கையே பதிவு செய்துள்ளனர் என்றும் தனக்கு கேரள போலீசிடத்தில் இருந்து நீதி கிடைக்காது என்றும் பிந்து கூறியுள்ளார். வினை விதைத்தவன் வினை அறுத்தே தீருவான்! வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும் https://youtu.be/syfaCz3UIyQ

Exit mobile version