தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மூலம் தமிழகம் முழுவதும்மக்களை சந்தித்து வருகிறார்.அண்ணாமலையின் இந்த யாத்திரையை ஆரவாரமாக கொண்டாடி வருகிறார்கள் தமிழக பாஜகவினர்.
இந்த பாதயாத்திரையில் மக்களின் ஆதரவு இளம் தலைமுறைகளின் ஆதரவு என பா.ஜ.கவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் திமுகவின் ஊழல். வாரிசு அரசியல். அப்பகுதியின் அமைச்சர். திமுகவினர் அடாவடி ,என அனைத்தையும் மக்களிடையே பேசி வருகிறார் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பேச்சை கேட்க மக்கள் கூடுகிறார்கள். இது திமுகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மத்திய பாஜக அரசை எதிர்க்க தி.மு.க கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் நீட் தேர்வு. ஆனால் அதை சுக்குநூறாக உடைத்துள்ளார் அண்ணாமலை. நேற்றைய நடைப்பயணத்தின் போது மருத்துவ சீட்கள் மற்றும் நீட் தேர்வு குறித்து பேசினார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
இதனிடையே அண்ணாமலை பேசுவதை மக்கள் பார்ப்பதற்கு மிக பெரிய எல்.இ.டி. திரைகள் ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த திரையில் ஆற்காடு வீராசாமி பேசிய வீடியோ ஒன்று நேற்று ஒளிபரப்பானது. இதில் பேசிய முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நாங்களாகவே மெரிட் லிஸ்ட்டை உருவாக்கி, யாருக்கெல்லாம் நூறு சதவீதம் சீட் கிடைக்குமோ அவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வழங்கிய பின்னர், அரசு கல்லூரியில் மீதமுள்ள சீட்டை விற்று விடுவோம்
2006-ல் இருந்து 2011-ம் ஆண்டில் ஏன் தனியார் மருத்துவமனைகள் அதிகமானது. நீட் வருவதற்கு முன்பு மருத்துவ கலந்தாய்வில் சூதாட்டம், ஊழல் நடந்தது. கருணாநிதியே இதை ஒப்புக்கொண்டதாக ஆற்காடு வீராசாமி அன்று தெரிவித்தார். என்று கூறிய வீடியோவை மக்கள் மத்தியில் திரையில் போட்டு காட்டிய அண்ணாமலை பேசினார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியது. மேலும் நீட் தேர்வினால் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் மருத்துவராகும் கனவு நினைவாகி வருகிறது என அண்ணாமலை பேசினார், நீட் தேர்வு மருத்துவ சீட் குறித்து அண்ணாமலை சொல்லும் விளக்கம் மக்களுக்கு நன்றாக புரிந்து வருகிறது.திமுகவின் நீட் எனும் ஆயுதம் அண்ணாமலையின் அதிரடியால் உடைத்து தகர்த்தெறியப்படும் என கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.