Friday, March 13, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..

Oredesam by Oredesam
February 10, 2024
in செய்திகள்
0
Palani Murugan Temple

Palani Murugan Temple

FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு வந்த பிறகு இந்து அறநிலைய துறை செயல்பாடாத துறையாகவும், இந்து மக்களுக்கே எதிரானதாகவும் உள்ளது என மக்கள் குமுறி வருகிறார்கள். இந்து அறநிலைய துறை நிர்வகிக்கும் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பிரசித்தி பெற்ற அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பிரசித்தி பெற்ற அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து பழனி முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பழனி முருகனுக்கு காவடிகள் எடுத்துக்கொண்டு பாதயாத்திரை வந்த பக்தர்கள் நாதஸ்வரம், மேளங்கள் வாசித்தபடி கிரிவலப் பாதையில் வந்து படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் முயன்ற போது கோயில் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பழனி கோவிலில் பணிபுரியும் நாதஸ்வர, தவில் ஊழியர்களை தவிர வேறு நபர்கள் நாதஸ்வரம், மேளம் அடித்து மலைக்கோவிலுக்கு வர அனுமதி இல்லை என்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அடுத்ததாக பழனி முருகன் கோவிலுக்குள் மாற்று மதத்தினர் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. திடீரென அந்த அறிவிப்பு பலகையை பழனி முருகன் கோவில் நிர்வாகம் அகற்றியது. இந்த நிலையில் மாற்று மதத்தினர் கோவிலுக்குள் வரக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தற்போது பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் காலாவதியான நிலையிலும் மற்றும் லட்டு, முறுக்கு ,அதிரசம் உள்ளிட்ட பிரசாதங்கள் கெட்டுப்போன நிலையிலும் விற்பனை செய்யப்பட்டதாக பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பழனி கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், பிரசாதங்களில் எண்ணெய் சிக்கு வாடை அடிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் திருக்கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு திருக்கோவில் ஊழியர்கள் வைத்து ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் உட்பட பிரசாதங்கள் விற்பனை செய்தது போக மீதம் இருந்த பிரசாதங்களை, கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இரவு பகலாக விற்பனை செய்து வந்துள்ளார்கள். கெட்டுப் போன பிரசாதங்களை பக்தர்கள் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள் 15 நாட்களுக்குள் விற்கப்பட வேண்டும். ஆனால் அவையும், தயாரிப்பு தேதி இல்லாமலும் விற்கப்படும் லட்டு ,முறுக்கு, அதிரசம் போன்ற பிரசாதங்கள் கெட்டுப்போன வாசனை அடிப்பதாக பக்தர்கள் மற்றும் ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவையின் செந்தில் குமார் குற்றம் சாட்டினார்.

இதனால் பிரசாதங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள், பக்தர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தனர். பழனி உணவுத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டது பொய் என கோவில் நிர்வாகம் சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டனர். இதனையடுத்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையங்களில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கலைவாணி தலைமையில் ஏழு அதிகாரிகள் கெட்டுப்போன பிரசாதம் விற்பனை செய்த கடைகளில் ஆய்வு மேற்கண்டனர்.

ஆய்வில், லட்டு எண்ணை சிக்கு வாடை அடிப்பதாகவும், மேலும் லட்டு காய்ந்து விட்டதாகவும் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்கிறோம் என்றும் தெரிவித்தனர்.பஞ்சாமிர்தக் குடோனை ஆய்வு செய்யாமல் பிரசாதங்கள் தயாரிக்கும் நிலையத்தை மட்டும் ஆய்வு செய்தனர். அப்போதும் கூட பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதி இல்லை என்றும் ஒரு சிலர் மட்டும் வரலாம் என்று பழனி காவல் கண்காணிப்பாளர் சுப்பையா தெரிவித்தார்.

இதனை அடுத்து மூன்று செய்தியாளர்கள் மட்டும் உள்ளே சென்றனர். உள்ளே சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேக்கிங் செய்யும் கவர்கள் மாற்றப்பட வேண்டும் என்றும், எண்ணையை நன்றாக வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர். மேலும் காலாவதி தேதி பதிவு செய்து விற்பனை வேண்டும் என்றும் தெரிவித்து சென்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

29 நவம்பர், 2020-க்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு.!

September 6, 2020
பதவிஏற்ற 7 நாளில் தலித் பெண் சேர்மன் திடீர் ராஜினாமா; ரூ.1 கோடி கேட்டு திமுக மா.செ மிரட்டல்? காற்றில் பறக்கும் சமூகநீதி.

பதவிஏற்ற 7 நாளில் தலித் பெண் சேர்மன் திடீர் ராஜினாமா; ரூ.1 கோடி கேட்டு திமுக மா.செ மிரட்டல்? காற்றில் பறக்கும் சமூகநீதி.

October 30, 2021
காலிஸ்தான் ஆதரவாளர்களால் ஆஸ்திரேலியாவில் ஹிந்து கோவில் மீண்டும் சேதம்.

காலிஸ்தான் ஆதரவாளர்களால் ஆஸ்திரேலியாவில் ஹிந்து கோவில் மீண்டும் சேதம்.

May 6, 2023
kilambakkam-bus-terminus-tender-scam-savukku-shankar

2 அமைச்சர்கள் மீது ஊழல் புகார்…!! அவசரமாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. வெளி வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்…

January 5, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x