சிலருக்கு தேவையற்ற பயம் எந்நேரமும் மனதில் இருந்து கொண்டே இருக்கும். தமது வீட்டிலிருக்கும் உறுப்பினர்களை பற்றி, அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற எதிர்மறை எண்ணங்களும், தேவையற்ற பயம் மற்றும் தேவையற்ற சிந்தனைகள் வந்துகொண்டே இருக்கும். இது போன்றவர்கள் இரவில் நிம்மதியாக தூங்க கூட மாட்டார்கள்.
இந்த பிரச்சனை உங்களுக்கு உள்ளதா? அப்படி இருந்தாள், ஒரு கண்ணாடி டம்ளரில் இரண்டு கைப்பிடி அளவு உப்பை போட்டு, அதை நீரால் நிரப்பி விடவும். பிறகு அந்த கண்ணாடி கம்பெனி நீங்கள் உறங்கும் இடத்தில் கட்டிலுக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம்.
காலை எழுந்தவுடன் முதல் வேலையாக, அந்தக் கண்ணாடி டம்ளரில் உள்ள தண்ணீரை எடுத்து வாஷ் பேசினில் கொட்டி விடவும். இதை 21 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால். பின்னர் பலவீனமாக இருக்கும் உங்கள் மனம் பலம் அடைவதை உணரலாம்.
சிலருடைய வீட்டில் நிம்மதி இழந்து காணப்படும். என்னேரமும் சண்டை சச்சரவு போன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். இப்படி உள்ள ஒரு வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரில் 2 கைப்பிடி உப்பு போட்டு நீரை நிரப்பி அதை உங்கள் குளியல் அறையில் வைத்து விட வேண்டும். காலையில் எழுந்தவுடன் அந்த நீரை எடுத்து வாஸ்பேஷன் கொட்டிவிட வேண்டும். இதற்கும் 21 நாட்கள் தான் கணக்கு.
மேற்குறிப்பிட்ட எந்த பிரச்சனைக்கும் பரிகாரம் செய்வது இரவு நேரத்தில் தான் இருக்க வேண்டும். அதுவும், இரவு 8 மணிக்கு மேல் தான். காலை எழுந்ததும் அந்த நீரை எடுத்து கீழே கொட்டி விடவும் இவ்வளவு தான். மாதத்திற்கு ஒரு முறையாவது சமுத்திரத்தில் அதாவது கடல் நீரில் குளிப்பது எதிர்மறை எண்ணங்களை போக்க உதவும்.
கடல் நீரை எடுத்து வந்து நம் வீடு முழுவதும் தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். எல்லோரும் இதனை செய்வது கடினம். எனவேதான், கல் உப்பு கலந்த நீரை வீட்டில் இப்படி முறையாக செய்வது நல்ல பலனைத் தரும் என்பதற்காக நம் முன்னோர்கள் எழுதி வைத்த பரிகாரம் தான் இது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














