தமிழகத்தில் கோவில்கள் மூடியதால் ஆந்திராவில் சாமி தரிசனம்! திருப்பதியில் துர்கா ஸ்டாலின்!

தி.மு.க வின் பகுத்தறிவு என்பது இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது ஆகும். இந்து பண்டிகைக்கு திமுக தலைமை எப்போதும் வாழ்த்து சொல்வது கிடையாது. மற்ற மத பண்டிகைகளுக்கு முந்தி கொண்டு வாழ்த்து சொல்வது திமுகவின் வழக்கம்.

இதெல்லாம் எதற்காக அனைத்தும் சிறுபான்மை ஒட்டு அரசியலுக்கு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்,தீவிர இந்து பற்றாளர். ஸ்டாலின் முதல்வராக வேண்டி போகாத கோவில் இல்லை வேண்டாத கடவுள் இல்லை என்றே சொல்லலாம்.

தற்போது திமுக ஆட்சி அமைத்தும் ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆடி அமாவாசையை முன்னிட்டு அனைத்து முக்கிய கோவில்களும் மூடியது தமிழக அரசு. கூட்டம் கூட தடை விதித்தது. தர்ப்பணம் கொடுக்க அனுமதிக்கவில்லை.

ஆனால் பக்ரீத் பண்டிகைக்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. பனிமய மாத திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை என பாரபட்சம் காட்டியது திமுக அரசு.

தமிழகத்தில் முக்கிய கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆந்திர மாநிலம் சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார். அவர் இறுக்கப்பட்டவர் உடனடியாக கிளம்பி ஏழுமலையானை தரிசித்தார். தமிழகத்தில் கோவில்கள் மூடப்பட்டதால் தமிழாக பாமர இந்து மக்கள் எங்கே கடவுளை வணங்குவார்கள்.

கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார் துர்கா.நேற்று காலை அங்கு சென்ற துர்கா விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார்.

பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.தொடர்ந்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version