கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், முதல் வழக்கு!
உத்தரபிரதேசம், உத்தரா கண்ட், மத்தியபிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங் களில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில் இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத் தின்படி 10 ஆண்டு சிறை, ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும். தற்போது கட்டாய மத மாற்றும் தடை சட்டம் குஜராத்திலும் கொண்டு வரபட்டுள்ளது.
இந்த நிலையில் கட்டாய மத மாற்ற சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது.குஜராத்தில் வதோதராவைச் நகரில் வசிக்கும் சமீர் குரேஷி என்பவர், 2019ல், சாம் மார்ட்டின் பொய்யான பெயருடன், சமூக வலைதளம் வாயிலாக கிறிஸ்தவ இளம்பெண்ணுடன் பழகி காதலிப்பதாக கூறி அந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகி உள்ளார்.
அந்த பெண்ணை ஆசை வார்த்தைகளை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லாவிடில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
மேலும் அவர்களின் திருமணம், முஸ்லிம் முறைப்படி நடந்தபோதுதான், சமீர் குறித்த உண்மைகள் அவருக்கு தெரியவந்தது. பின், மனைவியின் பெயரை மாற்றிய அவர், மதம் மாறும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதையடுத்து, சமீபத்தில் அமல் படுத்தப்பட்ட கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், மாநிலத்தில் முதல் வழக்கை பதிவு செய்த போலீசார், சமீர் குரேஷியை கைது செய்தனர்.