இந்த நிலையில் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் கும்பல் மட்டும் கொரானா காலங்களிலும் கொள்ளையடித்து வந்தனர். மணல் கொள்ளையர்களை கைது செய்தால் உடனடியாக முன்ஜாமீன் பெற்று அபராத தொகையை கொடுத்துவிட்டு மீண்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இயற்கை வளங்கள் அழிந்து கொண்டே வருகின்றது இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சண்முகம் சம்பத் ஆகியோர் மணல் கொள்ளை தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர்
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் வழக்கில் சிக்கிய 40க்கும் மேற்பட்டோர் முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கூறியதாவது: மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமின் வழங்கப்படாது. மணல் கடத்துபவர்களால், நிலத்தடிநீர் ஆதாரங்களும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
முன்ஜாமின் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் மணல் கடத்தல் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பாக 15 முன்ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வருகிறது. ஊரடங்கல் மக்கள் வாழ்க்கை முடங்கினாலும், மணல் கடத்தல் மட்டும் முடங்கவில்லை எனக்கூறி 40 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.