சங்கிகள் என்பவர்கள் இன்று உருவானவர்கள் அல்ல, எப்பொழுதெல்லாம் இந்துமதத்துக்கு ஆபத்து வந்ததோ அப்பொழுதெல்லாம் உருவானார்கள்
புத்தமதம் இந்துமதத்தை ஒழித்தபொழுது எழுந்த ஆதிசங்கரர் முதல், சமண மதத்தை வேரறுத்த நாயன்மார்கள் வரை ஒரு சங்கி தலைமுறை உண்டு
பவுத்தர்களை அடக்க ஈழபடையெடுப்பினை செய்த ராஜராஜசோழனும், கடல் கடந்து சென்ற ராஜேந்திர சோழனும் பிற்கால சங்கிகள்
அந்நிய ஆப்கானிய ஆட்சிக்கு எதிராக வாளெடுத்து வெற்றிமேல் வெற்றிபெற்ற வீரசிவாஜியும், நாயக்க மன்னர்களும் அடுத்த சங்கிகள்
பிரிட்டானியர் இங்கு வெற்றிபெற்றபொழுது அதாவது கிளைவ் காலத்தில் பிரிட்டானியர் இங்கு ஆள அஸ்திவாரமிடபட்டபொழுது அவர்கள் இந்தியரின் அபிமானம் பெற சில காரணங்கள் உண்டு
முதலாவது யாராலும் அடக்கமுடியாத முகலாய வம்சத்து ஆட்சியினை, நாயக்கமார்களும் மராட்டியரும் பலமிழந்த காலத்தில் அட்டகாச உச்சியில் இருந்த அவர்கள் ஆட்சியினை யார் அடக்குவர் என இந்துக்கள் கவலைபட்ட காலத்திலேதான் பிரிட்டானியன் வந்தான்
அவன் இந்து மக்களையோ, ஆலயத்தையோ தொடவில்லை மாறாக ஆட்சி ஒன்றே அவன் குறியாய் இருந்தது, அவன் இஸ்லாமிய மன்னர்களை வென்றதையும், கிறிஸ்தவராயினும் மதபணியில் ஈடுபட்ட டச்சு, போர்ச்சுகீசியரை ஒடுக்கியதையும் கண்ட இந்திய சமூகம் அவனை ஏற்றது
ஒரு கோஷ்டியினை விரட்ட மத ஆபத்தில்லா பிரிட்டானியனை ஏற்பது ஒரு தந்திரமாக இந்துக்களுக்கு இருந்தது, அதில்தான் இந்நாடு பிரிட்டானியர் வசமாயிற்று
அப்படி ஒரு ஆதிக்கத்தின் பின் இந்தியா வந்தபின்பே ஐரோப்பிய விஷங்கள் வந்தன
புத்தம், சமணம், ஆப்கானியம் என பல மிரட்டல்கள் வந்த பொழுது உருவான “சங்கிகள்” 1850க்கு பின் மறுபடியும் உருவானார்கள்
அந்த சங்கிகளின் தொடர்ச்சிதான் இப்போது உருவாகியிருக்கும் புது சங்கி கூட்டம், அதை பெருமையுடன் ஏற்க வேண்டுமே தவிர, அதில் வெட்கபடவோ அவமான படவோ ஏதுமில்லை
சங்கரர், ராமானுஜர், ராஜராஜ சோழன், வீர சிவாஜி, கிருஷ்ண தேவராயர், திருநாவுக்கரசர், அப்பர், திருஞானசம்பந்தர் போன்ற பெருமைமிக்க சங்கிகளின் தொடர்ச்சியான இக்கால சங்கிகள் எப்படி உருவானார்கள்?
1850க்கு பின் அவர்களை உருவாக்கிய சக்தி எது? சங்கிகளின் உக்கிர எதிர்ப்பை தாங்கமுடியா எதிர்கோஷ்டி எப்படி திராவிட திருட்டு கூட்டத்தை உருவாக்கியது?
அந்த திராவிடம் எப்படி சினிமாவினை கைபற்றி தமிழகத்தை ஆண்டு இன்றும் அந்த விஷத்தின் எச்சமாக கமல், சூர்யா, சமுத்திரகனி, விஜய்சேதுபதி என தொடரவைக்கின்றது?
இந்துமதத்துக்கு ஆபத்து வரும்பொழுதெல்லாம் இங்கு சங்கிகள உருவாக்கும் காலம் 1850 முதல் கொஞ்சம் கொஞ்சமாக சங்கிகளை உருவாக்கி இன்று ஓரளவு பலமாக நிற்க வைத்த வரலாறு என்ன?
சங்கிகள் இனி தவிர்க்கமுடியாத காலத்தின் கட்டாயாம் என வந்திருக்கும் இன்றைய நிலை , வழக்கமான வரலாற்று அலை போல இன்று சுழன்றடிப்பது எப்படி?
சங்கி என்பவன் சாணக்கியன் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் தோன்றி, சங்கரர் காலம், ராஜராஜன் காலம், வீர சிவாஜி காலம், ஏன் அப்பர் திருஞான சம்பந்தர் காலத்தில் எல்லாம் தீரத்துடன் இந்துமதத்தை தாங்கியவன் என்ற பெரும் கர்வத்தினை கொள்ளுங்கள்.
சங்கி என்பவன் சங்கர பக்தன் என்பதை கர்வமாக உணருங்கள், அது ஆயிரம் யானை பலத்தை கொடுக்கும், அந்த பெருமித உணர்வுடன் இந்த நூற்றாண்டில் தமிழகம் கண்ட சங்கி போராட்டத்தை வாசிக்க தயாராகுங்கள்.