கடந்த 44 மாதங்களாக சிறையில் உள்ள அவரது தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்.15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையில் சசிகலா விடுதலை தொடர்பாக ஆர்டிஐ கேள்விக்கு பதிலளித்திருந்த சிறை கண்காணிப்பாளர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதே சமயம் அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சிறையின் நன்னடத்தை விதிமுறைகள், ஏற்கெனவே அனுபவித்திருந்த தண்டனைக் காலம் ஆகியவற்றின்படி சசிகலா முன்னதாகவே விடுதலையாவார் என அவரது வழக்கறிஞர்களும், அமமுகவினரும் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் சசிகலா, சிறப்பு நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்தினார். ரூ.10.10 கோடிக்கான காசோலையை சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர், நீதிபதி சிவப்பா முன் செலுத்தினார்.