துருக்கியில் கொல்லபட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் விவகாரம் பெரிதாய் வெடிக்கின்றது சவுதியினை சேர்ந்த சமூக நீதி எழுத்தாளர் கஷோகி அமெரிக்காவில் குடியேறியிருந்தார், சவுதி அரசின் மேலான விமர்சனங்களை வைப்பது அவரின் வாடிக்கை, சவுதி அரசகுடும்பம் அவரின் விமர்சன இலக்காய் இருந்தது.பின்லேடனின் முன்னாள் நண்பரும் மிக பிரசித்தி பெற்ற சவுதி அடையாளமாகவும் அவர் இருந்தார் அப்படிபட்ட ஒருவருக்கு சவுதியின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா ஏன் குடியுரிமை கொடுத்து வைத்திருந்தது என்றால் அதுதான் உலக அரசியல்அந்த கஷோகி 2018ம் ஆண்டு துருக்கியில் வைத்து கொல்லபட்டார், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் திருமணம் சமந்தமான ஆவணங்களை கோர சென்றார் அதன் பின் அவரை காணவில்லை பின் அவர் கொல்லபட்டது உறுதியானதுகஷோகியின் கொலையில் சவுதியின் கரங்கள் இருப்பதுது தெரிந்தும் அந்நாளைய அமெரிக்க அதிபர் டிரம்பர் “சவுதி நம்ம கூட்டாளிய்யா” என சொல்லி காத்து வந்தார்இந்த தா.கிருட்டினன் கொலையில் மு.க அழகிரியினை பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் காத்தார் அல்லவா அப்படிஇப்பொழுது ஆட்சிமாறி பிடன் வந்துவிட்டார், அன்னாருக்கும் சவுதிக்கும் ஈரான் விஷயமாக முட்டி கொள்ள சவுதியினை கையில் எடுக்க கஷோகி விவகாரத்தை கையில் எடுத்துவிட்டார் பிடன்கஷோகி அமெரிக்க குடிமகன் என்பதால் அமெரிக்கா உள்ளே நுழைய முடியும்இப்பொழுது சவுதி அரச ஊழியர் உளவுதுறை காவல் என 76 பேர் மேல் குற்றம் சுமத்தியிருக்கின்றது அமெரிக்கா, அவர்கள்தான் குற்றவாளிகள் என சொல்லியிருக்கும் அமெரிக்கா நாட்டாமை சரத்குமார் பாணியில் சில தண்டனைகளை அறிவித்திருக்கின்றதுஆனால் இந்த 76 பேரின் தலமையான சவுதி இளவரசர் பற்றி ஒரு பேச்சும் பிடனிடம் இல்லைஏன் என்றால் அதுதான் உலக அரசியல்சவுதி இளவரசரின் குடுமி தன் கையில் இருப்பதை மறைமுகமாக காட்டுகின்றது அமெரிக்கா, அதே நேரம் தங்கள் பெயரை அமெரிக்கா வெளியிட்டால் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஷூ கூட இருக்க முடியாது ஒரு அமெரிக்க பொட்டு வெடி கூட வெடிக்காது, ஒரு சொட்டு பெட்ரோல் கூட செல்லாது என்பது சவுதிக்கும் தெரியும்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















