கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திருப்பூர், திருநீலகண்டபுரத்தை சேர்ந்த மோகன சுந்தரம், 45, இந்து முன்னணி கோட்ட செயலாளராக உள்ளார்.
இவரது வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த கார் எரிக்கப்பட்டது.இது தொடர்பாக திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது திருப்பூர் காவல்துறை.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை காவல்துறை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பாக, கைப்பற்றப்பட்ட ‘சிசிடிவி’ பதிவை கொண்டு, துணைகமிஷனர் பத்ரிநாராயணன் தலைமையில், ஏழு தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.கார் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட, திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த அப்துல் அஜீஸ், 30, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த முகமது ேஷக் தாவுத், 23 ஆகியோரை, காவல்துறையினர் கைது செய்தனர்.இது குறித்து காவல் துறை கூறுகையில், ‘கைதான இருவரும், திருப்பூர் எம்.எஸ்., நகரில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இருவரும் எஸ்.டி.பி.ஐ., உறுப்பினர்கள். இதில், மேலும், ஐந்து பேருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க, தனிப்படையினர் தாராபுரத்தில் முகாமிட்டுள்ளனர், என தெரிவித்தார்கள்.