SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் நடத்திய, மாநில அளவிலான ‘சொல் தமிழா சொல்’ மாபெரும் பேச்சுப் போட்டியின் இறுதிச் சுற்று விழாவில் கலந்து கொண்டு, போட்டியாளர்களின் மேடைப் பேச்சினைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி.
SRM கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான ஐயா பாரிவேந்தர் அவர்கள், சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உடையவர். பாராளுமன்ற உறுப்பினராகத் திறம்படச் செயலாற்றியவர். பல நூறு கோடி தனது சொந்த நிதியைச் செலவழித்து, தனது தொகுதியை மேம்படுத்தியவர். தனது பெயருக்கேற்ப, வள்ளலாகவும், வேந்தராகவும் செயல்பட்டு, தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ்ப் பேராயம் அமைப்பினை உருவாக்கி, தமிழ் எழுத்தாளர்கள், பேச்சாளர்களை அங்கீகரித்து வருபவர். அதன்படி, தமிழில் சிறந்த பேச்சாளர்களை மாநில அளவில் உருவாக்கும் ஒரு முயற்சியாக, இந்த சொல் தமிழா சொல் நிகழ்ச்சி அமைந்திருப்பது மிகுந்த பெருமைக்குரியது.
தமிழகம் முழுவதும் இருந்து, சுமார் 2,000 பேச்சாளர்கள் பங்கேற்று, வெகு சிறப்பாக நடந்தேறியிருக்கிறது இந்த சொல் தமிழா சொல் நிகழ்ச்சி. போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் அனைவருக்கும், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். வரும் ஆண்டுகளில் மேலும் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, பல சிறந்த பேச்சாளர்கள் நமது தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதே நமது ஆசை.
விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அண்ணன் சீமான் அவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதும், அண்ணன் அவர்களின் மிகச் சிறப்பான மேடைப் பேச்சை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
வெற்றி பெற்றவர்களைத் தேர்ந்தெடுக்கும் கடினமான பணியினை மேற்கொண்டு, வாழ்த்துரை வழங்கிய மிகச் சிறந்த தமிழறிஞர், ஐயா பேராசிரியர் திரு.கு. ஞானசம்பந்தன் அவர்கள், தமிழ்ப் பேராயத்தின் தலைவர், முனைவர் திரு. கரு. நாகராசன் அவர்கள்,
புதிய தலைமுறை ஆசிரியர் மற்றும், விழாவில் திரளாகப் பங்கேற்ற தமிழ் ஆர்வலர்கள், பாஜக, நாம் தமிழர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.