அமைச்சர் சேகர் பாபுவிற்கு செப்,10 வரை கெடு ராஜினாமா செய்யுங்கள் இல்லை செய்ய வைப்போம் ! அண்ணாமலை !
தமிழக விளையாட்டு துறை அமைச்சர், சமீபத்தில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்த பேச்சு ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை உதயநிதிக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தி.க தலைவர் வீரமணி சனாதானமும் இந்து மதமும் ஒன்றுதான் என்று பேசினார். அதை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சரும் பங்கேற்றுது தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் சேகர் பாபுவை காட்டமான முறையில் விமர்சித்து ஓர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தை முன்னிறுத்தி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சமூக வலைதள பக்கத்தில் அண்ணாமலை குறிப்பிடுகையில்,
“சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில், சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றுதான் என்பதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உறுதிப்படுத்தினார். பின்னர், அதே கூட்டத்தில், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்து மதத்திற்கு எதிரான இந்த வெறுப்புப் பேச்சு பேசும்போது, மேடையில் மெளனமாக இருந்தவர் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. மாநிலத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை அவர் இழந்துவிட்டார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
செப்டம்பர் 10ஆம் தேதிக்கு முன்பு அவர் பதவி விலகவில்லை என்றால், செப்டெம்பர் 11 ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பாஜக தொண்டவர்கள் முற்றுகையிடுவார்கள். எங்கள் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்”