சென்னை புரசைவாக்கத்தில் கங்காதீஸ்வரர் அமைந்துள்ளது. இந்த கோவில் காசிக்கு நிகரானது என்ற பெயர் பெற்ற கோவில் ஆகும்.
புரசைவாக்கத்தில் கங்காதீஸ்வரர் கோவில் எங்குள்ளது என கேட்டால் எல்லோரும் கை காண்பிக்கும் அளவுக்கு மிக முக்கியமான சாலை அருகே உள்ளது. கங்காதீஸ்வரர் சிவாலயம். இந்த கோவிலுக்கு சொத்துக்கள் ஏராளம். இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் ஒன்று அதனருகே அமைந்துள்ளது.
அருள்மிகு கங்காதேஸ்வரர் கோவில் தற்போது இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு இருக்கும் கோவிலுக்கு சொந்தமான திருக்குளம் புனரமைக்கப்படாமலேயே பராமரிப்பின்று குப்பை மேடு போல் காட்சி அளிப்பது அங்கு வரும் பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது.
இந்த கோவிலில் சிவராத்திரி வெகு விமர்சியாக கொண்டாடப்படும். 2013 முன்பு வரை இங்கு தெப்பத்திருவிழா நடந்துள்ளது. 2013க்கு பிறகு நீர் இல்லாத காரணத்தால் தெப்பத்திருவிழாவும் நடைபெறவில்லை.
தெப்பக்குளத்தின் இடத்தை ஆக்கிரமிக்கவே அதை குளத்தை புனரமைக்கப்படாமலேயே இருக்கிறது என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்
இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் சிலர் 2019ல் மனு கொடுத்திருக்கின்றனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் அங்கிருந்த செயல் அலுவலர் முன்னெடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக நடவடிக்கை எடுக்கிறோம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு கொடுத்தவர்களுக்கு பதில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் 7-6-21 அன்று எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.மேலும் 10-6-21 அன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும் நேரடி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.
9-6-21 அன்று முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்ப ட்ட நிலையில் 23-7-21 அன்று 24 கோடியே 23 லட்சம் செலவில் அருள்மிகு கங்காதீஸ்வரர் கோவில் குளம் மற்றும் அருள்மிகு விருப்பாசீஸ்வரர் கோவில் திருக்குளம் ஆகியவற்றை புனரமைத்துவிட்டதாக முதலமைச்சர் தனிப்பிரிவின் மூலம் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.
திருக்கோவில்களின் புனரமைப்பு நடைபெறாமலேயே பணி முடிவடைந்துவிட்டதாக கூறியது பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவில்களின் வருமானம் திருப்பணிக்கு அல்லாமல் எங்கே செல்கிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் பனி நடைபெறாததால் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளார்கள் அப்பகுதி மக்கள். அவ்வாறு வழக்கு தொடர்ந்தால் சேகர்பாபுக்கு சிக்கல் தான் ஏற்படும், நடைபெறாத பணி நடைபெற்றதாக முதலைமைச்சர் தனி பிரிவில் பதில் அளித்துள்ளதால் சேகர்பாபுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
தகவல் நன்றி :- நல்லாட்சி நாளிதழ்.