தேசிய காங்கிரஸ் கட்சியின் சிந்தாந்தத்திற்கு சோனியா, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் எதிரான நிலையை எடுத்து வருகிறது. பாரத தேசம் விடுதலை ஆன போது நமது நாட்டிற்கு என்று அரசியல் சாசன சட்டங்களை சட்ட மேதை அம்பேத்கர் தலைமையில் பல்வேறு குழுக்கள் ஆராய்ந்து வடிவமைத்தனர். அவற்றை ஒருங்கிணைத்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சட்டமாக வடிவமைத்தார்.
அதனை பாரத பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் போது அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆணித்தரமாக சில கருத்தை வெளியிட்டார். மதத்திற்கு ஏற்ப சில சட்டங்கள் தற்காலிகமாக இருந்தாலும் இந்த தேசத்தில் வாழும் அனைத்து மக்களையும் ஒரே குடிமக்களாக கருத வேண்டும் . அதற்கு இந்திய குடிமக்கள் அனைவருக்குமான ஒரே சட்டம் தான் நல்ல முன் உதாரணமாக இருக்க முடியும். மதத்தத்தின்பால்சட்ட வேறுபாடுகள் தற்காலிக ஏற்பாடு தான்.
எனவே குற்றவியல் சட்டம் எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ அதுபோல எல்லோருக்கும் பொதுமான சிவில் சட்டம் ஏற்படுத்தப்படும் என்றார். அப்போது பிரதமராக ஜவஹர்லால் நேரு அந்த சபையில் இருந்தார். எனவே அண்ணல் அம்பேத்கர் கொடுத்த வாக்குறுதியானது இந்த பாரத நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒன்று என்ற நிலையை பொது சிவில் சட்டம் உணர்த்துகிறது என்பதாகும். இந்த பொதுச் சிந்தனை அன்றைய நமது தலைவர்கள் அனைவரிடமும் இருந்தது.
செல்வ பெருந்தகை பல கட்சிகள் மாறியவராக இருந்தாலும் அண்ணல் அம்பேத்கர் சித்தாந்தத்தை கொண்டவராக கருதுகிறோம். ஆனால் அவர் இப்போது இவ்வாறு பேசுவது டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நெடுநோக்கு பார்வையை இழிவு படுத்துவதாக உள்ளது. செல்வ பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சியினர் காஷ்மீரை தேசத்திலிருந்து பிரித்து வைத்த சட்ட பிரிவு 370வதை நீக்க முடியாது, ராம ஜன்ம பூமி பிரச்சினை தீர்வுகாண முடியாது, முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு தீர்வு காண முடியாது என்பது போன்ற பலவற்றிற்கு ன முடியாது முடியாது என பெரிய பட்டியல் வைத்திருந்தார்கள். அவற்றை பற்றி நினைத்தாலே காங்கிரஸ் தலைவர்கள் அலறினார்கள்.
ஆகையால் அவற்றையெல்லாம் கனவிலும் செய்ய மாட்டோம் என்று முறைகேடான வழியில் காங்கிரஸார் சென்றார்கள். ஆனால் மக்கள் காங்கிரஸை கை கழுவிட்டு தீர்வை நோக்கி தேசத்தை அழைத்து சென்ற பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று கொண்டார்கள். இந்திய மக்களுக்கு தேச நன்மைதான் முதல் சிந்தனை. “மதம் என பிரிந்தது போதும்” என ஒரு பக்கம் வசனம் பேசுவது. மறுபுறம் மதத்திற்கு ஒரு சட்டம் வைத்துக்கொண்டு மத பிரிவினை எனும் தீமையை வளர்ப்பது எந்த வகையான அரசியல் என்பதை மக்கள் உணர வேண்டும். உண்மையில் பொது சிவில் சட்டம் ஏற்படும்போது தான் மக்கள்தொகை பெருக்கத்தின் சமமற்ற நிலைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்து முன்னணி ஆரம்ப காலம் முதல் தேசம் முழுமைக்கும் பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளது. எனவே பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுதந்திர தின உரையில் கூறியது போல பொது சிவில் சட்டம் தேசம் முழுமைக்கும் கொண்டு வர வேண்டும். இந்து முன்னணி பொது சிவில் சட்டத்திற்கு மக்களின் ஆதரவு கருத்துக்களை திரட்ட முனைந்து செயல்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.