வரும் விநாயகர் சதுர்த்தியன்று தமிழக, பா.ஜ.க வினர், ஸ்டாலினுக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தர்மபுரியில் நேற்று நடந்த, பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:
தி.மு.க.,வை பொறுத்தவரை தன் தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து மசோதா நிறைவேற்றப்படும் என கூறியுள்ளது, அந்த காரணத்துக்காகவே மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தற்போது சட்டசபையில் அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசிடம் உள்ள பயனற்று கிடக்கும் சொத்துக்கள் மட்டுமே குத்தகைக்கு விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய அரசு சொத்துக்கள் முழுதையும் விற்பதாக தவறான பிரசாரம் செய்கின்றனர்.
இந்தாண்டு மட்டுமல்ல, எந்த ஆண்டும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.
விநாயகர் சதுர்த்தி விழாவை, பொது இடங்களில் கொண்டாடக் கூடாது என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மக்களின் விருப்பத்திற்கு எதிரானது.
ரம்ஜான், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கும் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி விழாவை, கண்டுகொள்வது இல்லை.
எனவே, வரும் விநாயகர் சதுர்த்தியன்று தமிழக, பா.ஜ.க வினர், ஸ்டாலினுக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.