கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி, போக்குவரத்து கழகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக, பல பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார்கள் வந்தது. சுமார் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பண மோசடிக்கு, அவரது சகோதரர் அசோக்குமார், கூட்டாளிகள் கார்த்திகேயன், சண்முகம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு பதிந்து, செந்தில்பாலாஜியை கைது செய்தனர்
மேலும் செந்தில் பாலாஜி தொடர்பான பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்தது. இந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியது. இதனை தொடர்ந்து செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகியோரின் மனைவியர், குடும்பத்தாரையும் சேர்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
‘பண மோசடி மற்றும் பினாமி பெயரில் நிலம் வாங்கியது தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அப்போது, தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க தேவையான ஆவணங்களை எடுத்து வர வேண்டும்’ என, பல முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் ‘சம்மன்’ அனுப்பியும் அசோக் குமார் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜியின் சகோதரர் கொச்சியில் அமலாக்கத்துறையிரானால் கைது செய்யப்பட்டார். பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் அசோக்குமாரை கைது செய்ததாக அமலாக்கத் துறை தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அசோக் குமார்தான் செந்தில் பாலாஜியின் மூளையாக செயல்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய அமலாக்கத்துறையிடம் எல்லாம் தம்பிக்கு தான் தெரியும் என செந்தில்பாலாஜி கூறியுள்ளதால் அசோக் குமாரை டெல்லி அழைத்து சென்று விசாரிக்க கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் செந்தில் பாலாஜி தம்பியிடம் தான் பிசினஸ் டீல்கள் நடந்துள்ளதால் அசோக்குமாரிடம் பிசினஸ் செய்தவர்கள் பினாமிகள் அனைவரும் கலங்கியுள்ளார்கள். மேலும் அரசியல் முக்கியபிரமுகர்கள் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது , அடுத்த சில மாதங்களில் தமிழக அரசியலில் பல புயல்கள் அடிக்கும் பல அரசியல்வாதிகளின் வாரிசுகள், உறவினர்கள் அந்த புயலில் சிக்குவார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.