உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு எதிராக மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். மக்களின் உயிர்களை காப்பாற்ற தன்னுயிரை பணயம் வைத்து சேவை ஆற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் எல்.முருகன் அவர்களின் மனைவி மருத்துவராக பணியாற்றி வருகிறார். என்ற தகவல் கிடைத்துள்ளது. பா.ஜ.க மாநில தலைவராக இருக்கும் எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் பம்பரமாய் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார்கள்.
மற்றொரு பக்கம் பா.ஜ.க மாநிலத்தலைவரின் மனைவி டாக்டர் எம்.கலையரசி சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் அவர் மருத்துவமனையில் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.
தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமாக சென்னையில் மாநகரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மக்களை காப்பற்ற உயிரையே பணயம் வைத்து மருத்துவரகள், செவிலியர்கள் என இரவு பகல் பாராமல் பணி செய்து வரும் வேலையில், மக்கள் அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதையடுத்து பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன் அவர்களின் மனைவி, டாக்டர் எம்.கலையரசி அவர்கள் அடுத்த 15 நாட்கள் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தங்கி பணியாற்றுவதற்காக சென்றுள்ளார். இவரின் மருத்துவ சேவையை பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி : அவதார் நியூஸ்