கோயம்பத்தூர் போத்தனூர் அருகே உள்ள பஜன கோயில் தெருவில் வசித்து வரும் முகமது பீர் பாஷா வயது 66. அப்பகுதியில் உள்ள சிறுமிகளை பாலியல் ரீதியாக சீண்டுவதை வழக்கமாய் கொண்டுள்ளார். இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை உனக்கு ஓகே வா னு இரட்டை அர்த்தத்தோடு பேசி சீண்டியுள்ளார் . இந்நிலையில் முகமது பாஷா சிறுமிக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளான் . அதில் “உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. உனக்கு ஒகே வா” என எழுதபட்டுள்ளது.
இதனைச் அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் காட்டியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் முகமது பீர் பாஷா குடும்பத்தாரிடம் கூறி கண்டித்துள்ளார்கள். ஆனால் பாஷாவோ அதைப் ஒரு பொருட்டாகவே கருதவில்லை மீண்டும் சிறுமியை பாலியல் ரீதியில் சீண்டியுள்ளார். இதனால் பயந்து போனச் சிறுமி வீட்டை விட்டு வெளியே வராமால் இருந்துள்ளார். இதனால் வேதனையடைந்த அச சிறுமியின் பெற்றோர்கள் போத்தனுர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகமது பீர் பாஷா மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் 66 வயதான முகமது பாஷாவை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















