முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, கொடுத்த பள்ளிவாசல் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஹபீப் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த சில வாரங்களாக பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தாலும் வீடியோ ஆடியோ கால்களில் மாணவிகளிடம் அத்துமீறி ஆபாசமாக பேசுகிறார்கள். இதனால் மாணவிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். சில மாணவிகளால் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். சொன்னால் மதிப்பெண் குறைத்து விடுவார்களே என்ற பயத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் இராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி .இப் பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் அறிவியல் ஆசிரியராக பவேலை செய்து வருபவர் ஹபீப் இவர் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
கொரோனா காலகட்டத்திற்கு முன் பள்ளிகள் செயல்படும் போது படங்களில் சந்தேகம் என்றால் என் கைபேசி எண்ணிற்கு அழையுங்கள் என கூறியுள்ளார். மேலும் அங்கு படிக்கும் மாணவிகளின் கைபேசி எண்ணை சதரணமாக பேசுவது போல் பேசி பழகி வந்துள்ளார். வக்கிர புத்தி கொண்ட ஆசிரியர் மாணவிகளிடம் ஆபாசமாக பேச ஆரம்பித்துளளான். பின் புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு தெரிவிப்பதோடு அப்படி வர மறுத்தால் உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சி அடைய விடாமல் செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து பள்ளிமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபோல பல மாணவிகள் தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்ததாகவும் அதுபோல் நீயும் வரவேண்டுமென்று ஒரு மாணவியுடன் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. பள்ளி ஆசிரியரை ஒருவரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஏடிஎஸ்பி லயோலா இக்னோசியஸ், முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரா ரவி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















