மஹாராஷ்டிரா கூட்டணி – தாக்கரே ஆட்சி எப்போது கவிழும்???
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தோற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றார்கள் இதனை தொடர்ந்து “இது சிவசேனா ஆட்சி, காங்கிரஸ் ஆட்சியல்ல” என்று காங்கிரஸ் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு சிவசேனாவை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மட்டுமல்லாமல், சிவசேனாவிலும் பலர் உத்தவ் தாக்கரேயை வசைபாட ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆனால் அங்கு நடப்பது சிவசேனாவின் ஆட்சி அல்ல முதல்வர் உத்தவ் தாக்கரேயின் முடிவுகளுக்கு பின்னால் இருப்பது சோனியாவும், பவாரும் தான். அவர்களுக்கு இரை தான் உத்தவ் தாக்கரே தங்களை “சுத்தமாக” காட்டிக் கொண்டு தாக்கரேயை பலிகடா ஆக்குகிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க இதுவரை 40க்கும் மேற்பட்ட – காங்கிரஸ் , தேசியவாதகாங்கிரஸ் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க வை அணுகி ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என மராட்டிய ஊடகங்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உத்தவ் தாக்கரேயின் நிலைமை மோசமடைய தொடங்கியுள்ளதால் இதுவரை மேடைகளில் தனியாக தோன்றிய உத்தவ் தாக்கரே, இப்போது தன் படத்தின் பின், தன் பெற்றோரின் படம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். இதுமட்டுமில்லாமல் சாதுக்கள் படுகொலை, சட்டம் ஒழுங்கு, கொரோனா விவகாரத்தில் சரியான திட்டமிடல் இல்லை என மக்கள் பொறுமையிழந்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் மீண்டும் துவங்க ஆரம்பித்தாலும், மஹாராஷ்டிராவில் கொரோனா தாக்கம் கொடூரமாக உள்ளதால் இப்போதைக்கு ஊரடங்கு விலகாது என்ற கவலையில் தொழிலதிபர்கள் உள்ளார்கள். மஹாராஷ்டிராவில் அனேகமாக ஆகஸ்ட் வரைஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.
இப்போதைய நிலவரப்படி, இந்தியாவின் 1,39,049 தொற்றில் மஹாராஷ்டிரா 50,231! அடுத்து தமிழகம் @ 16,277.
இறந்த 4,024 பேரில் 1,635 பேர் மஹாராஷ்டிராவில். https://www.covid19india.org
மோதி ஊரடங்கு அறிவித்ததால் தான் இத்தனை பிரச்சினையும்”, என்கிறார் மகாராஷ்டிரா முதல்வர் ஆனால் பிரதமர் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கு முன், இந்தியாவில் முதல் முதலில் ஊரடங்கு அறிவித்த மாநிலங்களில் ஒன்று மஹாராஷ்டிரா – மார்ச் 31 வரை பிரதமர் அறிவிப்பதற்கு முன்னரே முதலில் ஊரடங்கை அறிவித்தார் உத்தவ் தாக்கரே.ஆட தெரியாதவள் மேடை கோணல் என்றது போல உத்தவ் பேச்சு! என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள்.
காங்கிரஸ் இப்பவே மகாராஷ்டிரா ஆட்சியிலிருந்து கழட்டி கொள்ள தயாராகி விட்டது. எனவே இன்னும் சில மாதங்களில் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி பொறுப்பேற்கும் என்பது நிதர்சனமான உண்மை