குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சோம் நாத் பவனி, சோம்நாத் கண்காட்சி கூடம், மீண்டும் கட்டப்பட்ட ஜூனா சோம்நாத் கோயில் ஆகியவை உட்பட பல திட்டங்கள் தொடங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிவன் பார்வதி கோயிலுக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் திரு லால் கிருஷ்ணா அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி உலகம் முழுவதும் உள்ள சிவன் பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவிதார். மேலும் பேசிய பிரதமர் மோடி, சோம்நாத் கோயிலை, சுதந்திர இந்தியாவின் சுதந்திர உணர்வுடன் சர்தார் பட்டேல் தொடர்பு படுத்தினார்.
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில், சர்தார் பட்டேலின் முயற்சிகளை நாம் முன்னெடுத்துச் செல்வதும், சோம்நாத் கோயிலுக்கு புதிய சிறப்பை சேர்ப்பதும் நமது அதிர்ஷ்டம் என கூறினார்.
காத்தல் அழித்தல் போன்ற செயல்களை செய்து வரும் சிவன் படைப்பாற்றலை உருவாக்குகிறார் சிவன் முடிவில்லாதவர், விவரிக்க முடியாதவர்’ மற்றும் என்றும் நிலையானவர்.
சிவன் மீது நமக்குள்ள நம்பிக்கை, கால வரம்புகளுக்கு அப்பால் நம் இருப்பை நமக்கு உணர்த்துகிறது, காலங்களின் சவால்களை சந்திக்கும் வலிமையை நமக்கு அளிக்கிறது என பிரதமர் கூறினார்.
மதிப்பு மிக்க கோயிலின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், கோயில் தொடர்ந்து அழிக்கப்பட்டதையும் மற்றும் ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்பும் எழுச்சி பெற்றதையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
உண்மையை பொய்யால் அழிக்க முடியாது மற்றும் இந்தியாவின் நம்பிக்கையை பயங்கரவாதத்தால் அழிக்க முடியாது என்ற நம்பிக்கையின் அடையாளமாக சோம்நாத் உள்ளது.
பயங்கரவாத துணையோடு பேரரசுகளை அமைக்கலாம் என்று நினைக்கும் அழிவுகரமான சக்திகள், சில காலம் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் அவை எப்போதும் நிரந்தரமானது அல்ல, அவர்களால் நீண்ட காலத்திற்கு மனிதகுலத்தை அடக்கி ஆள முடியாது.
சோம்நாத் கோயிலை, தாக்குதல்காரர்கள் சிலர் அழித்தது உண்மை. இது போன்ற கொள்கைகளை கண்டு உலகம் பயப்படும்போது, இது இன்றும் கூட உண்மையாக இருக்கிறது என பிரதமர் வலியுறுத்தி கூறினார்.