நாமக்கல் மாவட்டதை சேர்ந்த புளியம்பட்டி கிராமத்தை சென்=ர்ந்தவர் சிவனடியார் சரவணன் இவர் குண்டாங்கல் காடு பகுதியில் வசித்து வருபவர்.
அமாவாசை நாட்களில், குறைகளுடன் தன்னை நாடி வருகிற மக்களுக்கு, சிவநாமம் உச்சரித்து தாயத்து கட்டி ஆசிர்வதித்து அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். குறையோடு வருபவர்களின் குறைகள் தீருவதால் சுற்றிலும் உள்ள பகுதி மக்கள் அமாவாசை நாளில் சரவணனை தேடி கூட்டமாக வர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி செவ்வாய்க்கிழமை சிவனடியார் சரவணன் இடத்திற்கு தேவூர் போலீசார் சிவனடியார் சரவணனை அடித்து துன்புறுத்தியதுள்ளார்கள்.
இந்த நிலையில் மனம் உடைந்த சரவணன், “என்னை தாக்கிய அந்தோணி மைக்கேலை என்னுடைய ஆத்மா சும்மா விடாது. போலீசார் தாக்கியதால் தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.” என்று வாக்குமூலம் அளிப்பது போல் பேசி, அதை வீடியோவாக நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சரவணனின் வீடியோ கிடைத்ததும், அவர் நண்பர்கள், உறவினர்கள் ஊர்மக்கள் என அனைவரும் . இரண்டு நாட்களாக தேடிய வந்த நிலையில், காட்டுப்பகுதியில் பாறைகளுக்கிடையே சிவனடியார் சரவணன் சடலமாக மீட்கப்பட்டார். அவர் உடல் அழுகிய நிலையில் இருந்ததைப் பார்த்து ஊர் பொதுமக்கள் கதறி அழுதனர். அந்த ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது.
தற்கொலை முடிவை எடுத்ததுமே விஷம் அருந்திவிட்டு, தற்கொலைக்கான காரணத்தை சொல்லும் வீடியோ பதிவை அனைவருக்கும் சிவனடியார் சரவணன் அனுப்பி வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. புகாரின் பேரில் சரவணன் உடலைக் கைப்பற்றிய தேவூர் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிட்டதட்ட சாத்தான் குளம் சம்பவம் போல் அரங்கேறிய மற்றொரு சம்பவம் இது. ஆனால் யாரும் பொங்கவில்லை.எந்ந டிவி சேனல்களும் BREAKING NEWS திரும்ப திரும்ப போடவில்லை..
போராளிகள் யாரும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. கடைகள் சாத்தவில்லை. நடிகர்கள் காவல்துறை குறித்து வாய் திறக்கவில்லை நாங்கள் தான் தமிழ் நாட்டை காப்பாத்த போறோம் னு சுத்துற சமூக போராளிகளை காணவில்லை. இவர் தற்கொலைக்கு காரணமான அந்தோணி மைக்கலை கைது செய்யவேண்டும்.