தற்போது விஜய் அவர்கள் நடிப்பிலும் சரி அரசியலிலும் சரி தீவிரமாக இறங்கியுள்ளார், தோல்வி படங்கள் வெற்றி படங்கள் என மாறி மாறி கொடுத்தாலும் அவரது மார்க்கெட்டை அப்படியே வைத்துள்ளார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. போட்ட காசை திருப்பி எடுத்துவிடுகிறார்கள் என்பதே உண்மை.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘லியோ’ திரைப்படம் வெளியாகி உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அந்த படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை செய்தது.இதனை தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது,
நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், வாரிசு படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் கிரிக்கெட் களத்தில் தனது டீமுக்காக சண்டை போடும் வீடியோ ஒன்றை பாடலாராசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் பேட்டிங் டீமுக்கு சப்போர்ட் செய்யும் நடிகர் விஜய், பேட்ஸ்மேன் அடித்த பந்தை அனைவரும் 4 என்று சொல்ல, அதை நடிகர் விஜய் மறுத்து இல்லை அது சிக்ஸ்.. சிக்ஸ்.. என்று வாக்குவாதம் செய்து தனது டீமுக்கு கைதட்டி சப்போர்ட் செய்யும் வீடியோ இணையத்தில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அந்த கிரிக்கெட் களத்தில் நடிகர் விஜய், நடிகர் யோகிபாபு, இயக்குனர் வம்சி, நடிகை ரஷ்மிகா மற்றும் படக்குழுவினர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் குதூகலமாக கிரிக்கெட்டை ரசித்து கைதட்டி சப்போர்ட் செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://x.com/Lyricist_Vivek/status/1744708443179737415?s=20