திமுக ஆட்சி பதவியேற்று 100 நாட்கள் ஆன நிலையில் தமிழகம் முழுவதும் மின்வெட்டு உள்ளது.அதிமுக ஆட்சியில் இல்லாத மின்வெட்டு தற்போது இருக்கிறது.இதற்கு காரணம் நிர்வாக குளறுபடிதான். மின்சார துறையில் மட்டுமல்ல திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் நிர்வாக குளறுபடிகள் தொடர்கிறது.
தமிழகத்தில் மின்சாரம் விநியோகம் சீராக இல்லை. பகல் பொழுதுகளில் பல மணிநேரம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கு நீர் இருந்தும் பாய்ச்ச முடியவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இங்கு மட்டுமல்ல பல மாவட்டங்களில் மின் தடை என்பது தொடர்கிறது.
இந்த நிச்சயமற்ற மின்வெட்டால் ஐடி கம்பெனிகளில் பணி புரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி புரியும் மென்பொருள் பணியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சில நிமிடங்கள் மின்வெட்டு ஏற்பட்டாலும் அவர்களுடைய பணி மிகவும் பாதிப்படையச் செய்கிறது. இதனால் அவர்களுக்கு இன்வெட்டர் அவசியம் தேவைப்படுகிறது.
எப்போதும் ஜீன் மாதம் மின்வெட்டு கடுமையாக இருக்கும். அதுவும் இல்லாமல் மிக சிறப்பாக கையாண்டது அதிமுக அரசு மேலும் மின்வெட்டிற்கு காரணம் அணில்கள் தான் என கூறினார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இது வைரலானது. மின்வெட்டு ஆனால் அணில் ஓடிருக்கும் என தமிழக மக்களே நக்கலாக சொல்ல தொடங்கிவிட்டார்கள்
இந்த நிலையில் தற்போது மின்வெட்டிற்கு பாம்புகளும் காரணம் என்கிறார் அதே அமைச்சர் செந்தில் பாலாஜி. அது எப்படி என்று தெரியவில்லை அதிமுக ஆட்சியில் இல்லாத பாம்பு அணில் எல்லாம் ஒரே நேரத்தில் தமிழக்ம் முழுவதும் படையெடுத்து மின்வெட்டை உண்டாக்குகிறார்கள் என்று.
செந்தில் பாலாஜி ட்வீட்
ஈங்கூர் – திங்களுர் 110KV துணை மின் நிலையத்தில், Bphase conductor பழுதானது. அதை சீர்ப்படுத்தும் போது, அந்த பழுதுக்கு காரணம் பாம்பு என மின் பணியாளர்கள் கண்டறிந்தனர்.