தமிழகம் வெள்ள காடாக கட்சி அளித்து வருகிறது.மக்களோ வெள்ளத்தில் தத்தளித்து திண்டாடி வரும் வேளையில் திமுகவோ உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சியின தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விசிக தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் நாடாளுமன்றம் செல்ல டெல்லிக்கு புறப்பட்டவர் தண்ணீரில் நனையாமல் இருக்க அவரது வீட்டில் இருந்த ஊழியர்களை சேரில் வைத்து கார் வரைக்கும் தூக்கி சென்ற வீடியோ வைரலானது. சென்னை மட்டுமல்ல தமிழகமே மழை வெள்ள நீரால் சூழப்பட்டுளது. திருமா வீடும் விதிவிலக்கல்ல.வேளச்சேரியில் குடியிருக்கும் திருமா வவனின் வீடு வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றம் கிளம்பிய திருமாவின் சூ நனையாமல் இருப்பதற்காக அவரின் கால்கள் தண்ணீரில் படக்கூடாது என்பதற்காகவும் அங்கிருந்த இரும்பு இருக்கைகளின் திருமாவை மேல் நிற்க வைத்து ஊர்வலம் போல் தூக்கி வந்தார்கள். திருமாவளவானோ கார் வரை தூக்கி செல்லுமாறு உத்தரவிட்டார். பின் அவரை கார் வரை தூக்கி சென்றார்கள். மேலும் அங்கிருந்த ஊழியர்கள் இருக்கையின் மேல் திருமாவை வைத்து தூக்க ஒய்யாரமாய் அதன் மேல் திருமா நிற்க அங்கு ஒரே களோபரம் தான்.
இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலானது. மக்கள் மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்து வாடுகிறார்கள்.ஆனால்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி காலில் போட்டுள்ள ஷூ அழுக்காகி விடக்கூடாது தண்ணீரில் பட கூடாது என நினைப்பது எல்லாம் எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியை மக்கள் முன் வைத்து வருகிறார்கள்.
மேலும் இது குறித்து பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் திருமாவளவன் செய்த காரியத்தை கடுமையாக சாடியுள்ளார் அவர் கூறியுள்ளதாவது : என்ன தொல் .திருமாவளவன் சார்? கூட இருக்குறவங்கள இப்படி தான் நடத்துவீங்களா? சமூக நீதி, சமத்துவம்னு கம்பு சுத்துறதெல்லாம் சும்மா தானா? மழை தண்ணில கால் வச்சு உங்களால நடக்க முடியாம பூர்வ குடி மக்களை அதிகாரம் பண்ணலாமா. அடங்கமறு!அத்துமீறு! இதுக்கெல்லாம் அர்த்தம் இதுதானா? என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார்.