இன்றைய அரசியல் சூழ்நிலையில்பட்டியலின வகுப்பை சேர்ந்த ஆ.ராசா திமுக பொதுச்செயலாளராக ஆவதற்கான கட்டாயத்தை தமிழக பா.ஜ.க ஏற்படுத்தி இருந்தது. காரணம் பட்டியல் இனத்தைச் சார்ந்த முருகன் அவர்களை பாஜக தலைவராக நியமித்துதான். கலைஞர் இல்லாத சமயத்தில் புதிய அரசியல் சூழ்நிலையில் திமுகவின் பதவி நியமனங்கள் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதுவும் தி.மு.க உடன்பிறப்புகள் மத்தியிலும் அந்தக் கட்சியில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் ஆ.ராசாவின் நியமனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது .அப்படியும் கூட பட்டியிலனத்தை சேர்ந்தவரான ஆ.ராசா பொருளாளர் பதவி ஆக முடியவில்லை இனி தி.மு.க தொடர்ந்து சமூக நீதி பற்றி பேசினால் எடுபடுமா என்ற சந்தேகம் எழுகிறது.
திமுகவிற்குள் உட்கட்சி பூசல் மேலோங்கி வருகிறது. அனைத்தும் சின்ன தளபதி சொல் கேட்டுத்தான் நடக்கிறது. துரைமுருகன் விஷயத்திலும் அதேதான் இவ்வளவு நாள் பொதுச்செயலாளர் போடாததற்கு காரணம் உதயநிதி தான் என அறிவாலயம் வட்டரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் பொன்முடி நேரு போன்றோர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள்.
திருச்சியில் நேருவை ஓரங்கட்டப்பட்டு அன்பில் மகேஷ் முன்னிலைப்படுத்துவதனால் நேரு செம்ம அப்செட்டில் இருக்கிறாராம் இதனால் நேரு பாஜகவிடம் திரைமறைவாக பேசி வருவதாக தெரிகிறது.
மேலும் ஒட்டன் சத்திரம் சக்கரபாணி எம்.எல்.ஏ வும் கடும் அதிருப்தியில் உள்ளார். அங்கு இ.பெரியசாமியின்
மகன் செந்தில் பேச்சை தான் கேட்கவேண்டும் என்ற கட்டளை சின்ன தளபதி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
இது ஒருபுறம் இருக்க பிரசாந்த் கிஷோர் தனி ரூட்டில் பயணிக்கிறாராம். அவர் கம்பெனி ஆட்கள் அனைத்து தொகுதிகளிலும் முகாம் அமைத்து தர கோரி மாவட்ட செயலாளர்களுக்கு நேரடியாக உத்தரவு பிறப்பிக்கிறாராம். ஆண்டாண்டு காலமாக கட்சியை வளர்க்க படுபட்டவர்களே தலையில் அடித்துக்கொண்டு
கட்சி பணிகளை மேற்கொள்கிறார்கள். சிலபேர் ஒதுங்கிவிடுகிறார்களாம். திமுகவின் பலமே அதன் தொண்டர்கள் தான் ஆனால் அவர்களே திமுகவை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதே போல் சமூக நீதி பேசி அரசியல் செய்து வந்த திமுகவிற்கு பொருளாளர் பதவி ஒரு பட்டியிலினத்தவருக்கு கொடுக்கப்படவில்லை என்பது திமுகவுக்கு மேலும் சறுக்கலை உண்டாக்கியுள்ளது.