சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் தேசிய சூரிய மின்சக்தி நிறுவனமும், உஸ்பெகிஸ்தானின் சர்வதேச சூரிய மின்சக்தி நிறுவனமும்
• சூரிய ஒளிமின்னழுத்தம்
• சேமிப்பதற்கான தொழில்நுட்பங்கள்
• தொழில்நுட்பப் பரிமாற்றம்
ஆகிய துறைகளில் ஆராய்ச்சி/ செயல் விளக்கம்/ சோதனைத் திட்டங்களைக் கண்டறிவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
இரு நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில், சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் உறுப்பு நாடுகளில் சோதனை முயற்சியில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இருதரப்பும் பணியாற்றும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















