விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் செஞ்சி,திண்டிவனம்,வானுார்,திருவெண்ணெய்நல்லுார், விக்கிரவாண்டி,திருக்கோவிலுார்,கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்,உளுந்துார்பேட்டை கோர்ட் வளாகங்களில், தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் வரும் செப்., 13ல் நடக்க உள்ளது.இதில் காசோலை, வங்கி கடன், கல்வி கடன் மோட்டார் வாகன விபத்து, விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்ப பிரச்னைகள், நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள், விற்பனை, வருமானம் மற்றும் சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும்.
மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. சட்டரீதியாக சமரச முறையில் தீர்வு காணப்படும்.
தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் என்றால் என்ன !
தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) என்பது நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளையோ அல்லது வழக்குகளுக்கு முந்தைய நிலைகளில் உள்ள பிரச்சினைகளையோ சமரசமாகத் தீர்ப்பதற்கான ஒரு மாற்று தகராறு தீர்வு வழிமுறை ஆகும், இதில் மக்கள் நீதிமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முகாம்கள் மூலம், நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் வழக்குகளை விரைவாகவும், செலவு குறைந்த வகையிலும் தீர்க்க முடியும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














