ஹைதரபாத் கார்பரேசன் தேர்தலில் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அங்கு வேறு விதமாக தேர்தல் சென்று கொண்டிருக்கிறது. அசாதுதீன் உவைசியின் தளபதிகளில் ஒருவரான அக்பருதீன் நாங்கள் ஹைதர பாத் மாநகராட்சியை கைப்பற்றினால் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் முன்னாள் ஆந்திர முதல்வர் என்டி ராமராவ் சிலைக ளை உடைத்து நொறுக்குவோம் என்று கூற ஹைதரபாத் கார்பரேசன் தேர்தலில் அனல் பதிலுக்கு பிஜேபியினர் அசாதுதீன் உ வைசிக்கு எதிராக அனல் தெறிக்கும்விதமாக பேசி கொண்டு இருக்கிறார்கள்
முழு தென்னிந்தியாவும் காவிமயமாகும் என்று ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க எம்.பி.யும் பாரதிய ஜனதா இளைஞர் அணி தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவில் தான் ஒரு எளிய குடும்பத்தில் இருந்து வரும் ஒரு சாதாரண தொண்டர்கூட கட்சியின் தேசியத் தலைவராக உயர முடியும்.ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க வெற்றியடையும்…
தென்னிந்தியாவில் இது ஒரு ஆரம்பம் தான்.அதனைத் தொடர்ந்து தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம், நாங்கள் தமிழகத்தையும் வெல்வோம், நாங்கள் கேரளாவில் வெல்வோம், தென்னிந்தியா முழுவதும் காவிமயமாக்கப்படும்.
மேலும் அவர் பேசுகையில் பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு தனி நபருக்கான கட்சி கிடையாது.பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடி ஜிக்கான கட்சி கிடையாது.பாரதிய ஜனதா கட்சி J.P. நட்டா ஜிக்கான கட்சி கிடையாது. பாரதிய ஜனதா கட்சிஅமித்ஷா ஜிக்கான கட்சி கிடையாது.பாரதிய ஜனதா கட்சி எனக்கான கட்சியும் கிடையாது.பாரதிய ஜனதா கட்சி நம் அனைவருக்குமான கட்சி..அதனால் தான் நமது பாரதிய ஜனதா கட்சி ஒரு வித்தியாசமான கட்சி என்று சொல்கிறோம்…
இவ்வாறு பா.ஜ.க எம்.பி.தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.