சில மத்திய அரபிக் கடல் பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதிகள், வங்கக்கடலின் தென்கிழக்கு மற்றும் மேற்கு மத்தியப் பகுதி ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் விரைவாகத் தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
மேற்கு சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களில் மேற்கத்திய இமாலயப் பகுதிகளில் பரவலானது முதல் மிகப் பரவலானது வரையிலான மழை /இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதே காலத்தில் வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக மழை /இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அடுத்த 4-5 தினங்களில் மேற்கு கடலோரப் பகுதிகளில் மிகப் பரவலான மழை /இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதே காலத்தில் குஜராத், மகாராஷ்டிராவின் உட்பகுதிகள், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகத்தின் உட்பகுதிகள், தமிழ்நாடு ஆகியவற்றில் ஆங்காங்கே மழைப் பொழிவு இருக்கும். அடுத்த 3 நாட்களுக்கு கேரளா, கொங்கன், கோவா
ஆகியவற்றில் ஒருசில இடங்களில் கன மழையும், அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கன மழையும் இருக்கும்.