இமயமலை பகுதியில் உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டத்தில் இந்தியா-சீனா எல்லை அருகே 65 கி.மீ. தூரத்துக்கு முக்கியமான சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.325 கோடி ஒதுக்கீட்டில், கடந்த 2010-ம் ஆண்டு இப்பணி தொடங்கியது. சாலையின் தொடக்கத்திலும், இறுதியிலும் 40 கி.மீ. தூரத்துக்கு மேல் பாறைகள் உடைக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு விட்டது. ஆனால், நடுவில் உள்ள 22 கி.மீ. தூர பகுதியில், கடுமையான பாறைகள் நிமிர்ந்து நிற்பதால், அவற்றை உடைக்க முடியவில்லை. அதற்காக கனரக சாதனங்களை அந்த பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவர கடந்த ஆண்டு எத்தனையோ தடவை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை தோல்வியில் முடிவடைந்தன.
இதனால், சாலைப்பணி தாமதமானது. இந்நிலையில், நேற்று ஹெலிகாப்டர்கள் மூலமாக அந்த சாதனங்கள் வெற்றிகரமாக கொண்டு வந்து இறக்கப்பட்டன. இதன்மூலம், கடுமையான பாறைகளை உடைத்து, விரைவில் சாலை அமைக்க வழி பிறந்துள்ளதாக எல்லை சாலைகள் நிறுவனம் கூறியுள்ளது. ஓரிரு ஆண்டுகளில் சாலை பணி முடிவடையும் என்று தெரிவித்தது. சாலையை போட்டுவிட்டால் ராணுவ தளவாடங்கள் எளிதாக அந்த எல்லை அருகே இந்தியா கொண்டு வந்துவிடும். மேலும் எல்லைகளை ஆக்கிரமிக்க முடியாது என்பதால் தான் உலகமே கொரானா தொற்றை சமாளிக்க திணறி வரும் வேளையில் .சீன முதலில் இந்தியாவை சீண்டி பார்த்தது , சீண்டிப் பார்த்ததின் பின் விளைவை யோசித்த பின் பின்னங்கால் பஏன் சீனா இந்தியாவை மீண்டும்சீண்டுவது ஏன் ? காரணம் தெளிவாக உள்ளது , நேபாள பிரச்சனையையும் லடாக் எல்லைப் பிரச்சினையையும் தான்
2014 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் சீனாவின் கனவு திட்டமான முத்துமாலை சிதறடிக்கப்பட்டது. தற்சமயம் அவர்களுடன் பாகிஸ்தானின் துறைமுக பணி மட்டுமே உள்ளது அவர்கள் திட்டமிட்ட இலங்கை மற்றும் இதர நாடுகளின் மூலமாக திட்டமிடப்பட்டிருந்த பணிகளை நாம் முறியடித்து முத்து மாலையை சிதறவிட்டது இந்தியா. அதற்கு பின்பு அவர்களின் இன்னொரு கனவு திட்டமான பட்டு பாதையை நிறுத்தியது மோடி சர்க்கார்.
மேலும் இந்த கொரானா விவகாரத்தில் உலகநாடுகளில் சீனாவை தள்ளி வைத்துள்ளதும், அங்கு முதலீடு செய்த கம்பெனிகள் வேறு ஒரு நாட்டை நோக்கி நகர்வதும் அங்கு சூழ்நிலையை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சீனாவில் பொருளாதார நிலையும் கீழே சென்று கொண்டுள்ளது இதையெல்லாம் எப்படி சரி செய்வது அதற்கு,ஏதாவது ஒரு சப்பை கட்டு கட்ட வேண்டுமல்லவா அதற்குத்தான் சீனா கையில் எடுத்த விவகாரம் இந்தியாவை சீண்டிப் பார்ப்பது .
இந்திய சீன எல்லையான லடாக் அருகே தன்னுடைய படைகளை விரைவாக அனுப்பி நிலைமையை வேகமாக பரபரப்புக்கு உள்ளாக்கியது சீனா . அனைத்தையும் வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை மோடி அரசு , சரியான நடவடிக்கை எடுத்துக் கொண்டு வந்தது பின்னர் சீனா எல்லை பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம் என சொல்லி 2.5 கிலோ மீட்டர் எல்லையிலிருந்து பின்வாங்கியது சீனா .
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















