பாரதப் பிரதமரை அவதூறாகப் பேசிய அற்பப் பதர் எஸ்.ரா.சற்குணத்தை கைது செய்க – நாராயணன் திருப்பதிபயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி எனல்.-என்ற குறளுக்கேற்ப, தன்னை ஒரு பாதிரியார் என்று அழைத்து கொள்ளும் எஸ்.ரா.சற்குணம் என்ற அற்ப பதர், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஒருமையில் பேசியதோடு தனிப்பட்ட முறையில் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் தரக்குறைவாக அந்த நபர் பேசிய மேடையில் திமுக தலைவர் ஸ்டாலின், திரு.வைகோ அவர்கள் உட்பட பல கட்சிகளின் தலைவர்கள் இருந்தும், எஸ்.ரா.சற்குணத்தின் பேச்சை கண்டிக்காதது அரசியல் அநாகரீகத்தின் உச்சக்கட்டம்.
தமிழர்களுக்காக, தமிழ் கலாச்சாரத்திற்காக, பண்பாட்டிற்காக குரல் கொடுப்பதாக மார்தட்டி கொள்ளும் இவர்கள், பிரதமரை தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் தரம் கெட்ட நபரை கண்டிக்க முன் வராதது ஏன்?
தன்னை ஒரு பாதிரியார் என்று அழைத்து கொள்ளும் இந்த நபரை கிருஸ்துவ மத பெரியோர்கள் கண்டிப்பார்களா? சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தகாத வார்த்தைகளை கேட்டுக்கொண்டு வாய்மூடி மெளனமாக கேட்டுக்கொண்டிருந்தது ஏனோ?
பிரதமரை தரக்குறைவாக பேசிய அந்த அற்ப பதரை அந்த இடத்திலேயே காவல்துறையினர் கைது செய்திருக்க வேண்டும். கடந்த இரு வருடங்களுக்கு முன்னனர் இதே நபர் பிரதமரை தரக்குறைவாக பேசியது குறித்து நான் அளித்த புகார் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், பிரதமர் மீது இப்படிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்க தைரியம் வந்திருக்குமா?
தமிழக காவல் துறை விரைந்து செயல்பட்டு எஸ்.ரா.சற்குணத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.– நாராயணன் திருப்பதி.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















