பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வலுப்பெறுவதற்கு ஒரேயொரு வேலையைச் சரியாகச் செய்து விட்டால் போதும்.திமுகவை தகர்த்துவிடும் என்ற எண்ணம் அனைத்து பாஜகவினரிடையே இருந்தது, அது என்னவென்றால் பஞ்சமி நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களை மீட்டெடுப்பது தான்.
அந்த வேலையை குறிப்பாக பஞ்சமி நிலங்களை மீட்கும் வேலையை திரு.முருகன் அவர்கள் மிகச் சரியாகச் செய்தவர். இது தமிழ்நாட்டில் மறுதலுக்கான நேரம் என்றுசிறிய அரசியல் கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை கூறிக்கொண்டே வருகின்றது. இந்த நிலையில் கடந்த 8 மாத காலம் பாஜக தலைமை இல்லாமல் செயல்பட்டது. 8 மாத காலத்தில் சிறப்பான செயல்பாடுகள் தான் பா.ஜ.க வில் தொடர்ந்தது. உள்ளாட்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றது.
8 மாத காலத்திற்கு பிறகு எல்.முருகன் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் இது திமுகவினரை பலவீனப்படுத்தும் நேரம். சரியான களப் போராளியைத் தான் இறக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்த மூவ்-ஐ யாரும் எதிர்பார்த்திருக்காது. திருடனுக்குத் தேள் கொட்டியது போல திமுகவின் நிலை இப்பொழுது.
ஏனென்றால் பா.ஜ.க வின் தடா பெரியசாமி, டாக்டர் ஸ்ரீநிவாசன் ஆகியோரின் புகாரை ஏற்று திமுக-தலைவர் ஸ்டாலினுக்கு முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைப்பானை வழங்கியவர்.முதல் விசாரணைக்கு மாற்று பிரமுகராக ஆர்.எஸ்.பாரதியை அனுப்பிய ஸ்டாலின், இரண்டாம் கட்ட விசாரணையை எல். முருகன் விசாரிக்கக் கூடாது என கடிதம் கொடுத்தார். இதன்மூலம் தனது விசாரணையின் மூலமே திமுகவை கலங்கடித்தவர் எல். முருகன் என்பது அனைவரும் அறிந்ததே
குறுகிய தனது பதவிக் காலத்தில் தமிழகத்தில் அதிக அளவு பஞ்சமி நிலங்களை மீட்ட பெருமை எல்.முருகனைச் சாரும் ஸ்டாலினால் விவசாய அரசியல் செய்ய முடியாது அதை எடப்பாடி பழனிச்சாமி சரிகட்டிவிட்டார் தலித் அரசியலும் செய்ய முடியாதபடி பா.ஜ.க செய்துவிட்டது. அதேபோல் தி.மு.கவின் பெரிய புள்ளிகள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலம் அபகரித்துள்ளது. அதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது எனவே இவரை தமிழக பா.ஜ.க தலைவரக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. இதனால் மு.க.ஸ்டாலின் கலக்கத்தில் உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















