குடியுரிமை சட்டம் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? சவால் விட்ட இஸ்லாமிய பெண்மணி பாத்திமா அலி !

குடியுரிமை சட்டம் குறித்து தமிழகத்தில் தவறான பிரச்சாரத்தில் முக ஸ்டாலின் ஈடுபட்டுவருகிறார். இதனால் அவ்வபபோது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் மத மோதலை தூண்டும் விதமாக திமுக கூட்டணி தலைவர்கள் பேசி வருவது தமிழக மக்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது இதனால் திமுக தலைவர் விரக்தியில் உள்ளார். எப்படியாவது முதல்வர் பதவியில் அமர்ந்து விட வேண்டும் அதற்காக எந்த எல்லை வரை செல்லவும் தயாராக உள்ளார்,அதற்காக பார்ப்பனர் பிரசாந்த் கிசோரை துணைக்கு வைத்துள்ளார்.


குடியுரிமை சட்டத்தை வைத்து மத கலவரம் பண்ணிவிடவேண்டும் என்ற நோக்கில் சில அமைப்புகள் போராட்டங்களை நடத்திவருகின்றன, அதற்கு பின்புலமாக திமுக செயல்படுவதாக உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த நிலையில் அரசியல் விமர்சகர் பாத்திமா அலி ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்டுள்ளார். அதில் குடியுரிமை சட்டம் பற்றி திமுக தலைவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார் எனவும் ஸ்டாலின் தயாரா என சவால் விட்டுள்ளார். இஸ்லாமிய பெண்மணி சவால்விட்டுள்ளதை ஏற்பாரா முக ஸ்டாலின் .

Exit mobile version