நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடி,அவர்ககள் ஏழை மக்கள் அனைவருக்கும், உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பால் சுமார் 80 கோடி பேர், நவம்பர் வரை பயன் பெறுவர். இந்த முத்தான அறிவிப்பை அறிவித்த பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி.மேலும் பா.ஜ.க மாநில தலைவராக, கடந்த மார்ச் 11 ஆம் தேதி நியமிக்கப்பட்டேன்.மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்படுவர்.
அந்த அடிப்படையில், புதிய நிர்வாகிகள் பட்டியல் நேற்று முருகன்வெளியிட்டார்.மேலும் அவர் கூறியதாவது பா.ஜ.க வில் பல்வேறு தரப்பினர் இணைந்து வருகின்றனர். வி.பி.துரைசாமி, பால்கனகராஜ் ஆகியோரை தொடர்ந்து, அறம் மக்கள் நலச்சங்கத் தலைவர் அழகர்சாமி எனப்படும், ராஜா இணைந்துள்ளார்கள்.விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்தியல் பரப்பு மாநில துணை செயலர், கிரண்குமார் இணைந்துள்ளார்.பா.ஜ., அனைத்து பகுதிகளிலும், கிளைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளை துவக்கி உள்ளது.மத்திய அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், 1,170 காணொளி கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
200 பேச்சாளர்கள், சாதனைகளை எடுத்துரைத்தனர்.துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவம் கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வழக்கை விரைவாக நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.தி.மு.க.தலைவர் ஸ்டாலின், அனைத்திலும் அரசியல் செய்கிறார். சீன பொருட்களை தவிர்க்க வேண்டும் என,பா.ஜ.கவினர் உறுதிமொழி எடுத்து வருகிறோம்.இவ்வாறு எல்.முருகன் கூறினார்.