இராஜபாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி பேசியபோது, “நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களும் திமுகவின் தூண்டுதலால் தான் தற்கொலையே செய்துக்கிட்டாங்க.. திமுக தலைவர், எங்களுக்கு நாள் எண்ணிட்டு இருக்கிறார்.. நீங்க எண்ணும் நாட்கள் எல்லாம் உங்களுக்குதான்!
ஸ்டாலினின் ஆட்டத்தை ஆண்டவனாலும் முடிக்க முடியாது.. தமிழகத்தையே குட்டிச்சுவராக்கி, தமிழகத்தை தரிசாக்கிவிட்டு, கலைஞர் குடும்பம் மட்டும்தான் இன்னைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது.. தமிழ்நாட்டுக்கு நீ என்ன பண்ணியிருக்கே? உங்க சொத்து என்ன? அன்னைக்கு உங்க சொத்து என்ன? 32 சேனல் வெச்சிருக்காங்க.. டிவியை எங்கே திருப்பினாலும் இவங்கதான் வர்றாங்க.. கொஞ்ச நஞ்சம் பணமா?
கொலை பண்ணவன், கொள்ளை அடிச்சவன், ஊரைக் கெடுத்தவன், நாட்டைக் கெடுத்தவன், உலகத்தைக் கெடுத்தவன், தமிழை அழிச்சவன் எல்லாம் யாரு? மக்கள் யாரையும் மறக்கலையே.. பெரிய ஆப்பு திமுகவுக்கு மக்களே வெக்க போறாங்க..! ரஜினி மன்றத்தின் முக்கியமான ஆளுங்க எல்லாம் நம்ம கிட்ட வந்துட்டாங்க.. திமுகவுல யாரு இருக்காங்க?
சாமியே இல்லைன்னு சொன்னது யாரு, திமுகதான்.. திருநிறு பூசமாட்டான், குங்குமம் வெக்க மாட்டான், சாமியை நம்ப மாட்டான், பொண்டாட்டியையும் நம்ப மாட்டாங்க.. புள்ளைங்களையும் நம்ப மாட்டான்.. ஓரு பயலும் இன்னொருத்தரை நம்ப மாட்டாங்க.. அவங்கதான் திமுக காரங்க.தான்!” என்றார் அதிரடியாக!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















