1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அயோத்தியில் இந்துக்கள் வழிபடு நடத்தி வந்துள்ளனர் அப்போது எந்த தடையும் இருக்கவில்லை பின சில ஆட்சியாளர்கள் காலத்தில் அங்கு இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து மசூதி அமைத்து தொழுகை நடத்தி வந்துள்ளனர். இதனால் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சனை உருவானது. 70 ஆண்டுகளாக தீர்க்கப்படாத இந்த வழக்கு நவம்பர் 09, 2019 முடிவுக்கு வந்தது.
பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது இடம்தான் என்பதை இஸ்லாமிய அமைப்புகளால் நிரூபிக்க இயலவில்லை. இதனால் அந்த இடம் இந்துக்கள் ராமர் கோவில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் இராமர் கோயில் கட்டும் பணிகளை கண்காணிப்பதற்காகவும் கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. இதனை தொடர்ந்து அயோத்தி ராமர் பிறந்த இடம் என சொல்லப்படும் ராமஜென்ம பூமியில் இராமர் கோயில் கட்டும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இராமர் சிலை வைக்கப்படும் புதிய இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பூஜைகள் இன்றும் தொடர்கின்றது. கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன் இராமர் திருவுருவ சிலையை தற்போது இருக்கும் இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கும். அதன் பின் புதன்கிழமை காலை தற்ப்போது அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கோயிலில்இராமர் திருஉருவசிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பிம்லேந்திர மிஸ்ரா, அனில் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன