கொவிட் 19 வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக, கூடுதல் மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஆகியவற்றை அமைப்பதற்கும், தற்போதுள்ள வசதிகளை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான, உயிர் காக்கும் சுவாச கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள், முகக்கவசங்கள், மருந்துகள் போன்ற அனைத்து வசதிகளுடன் இவை அமைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.