கடந்த 15 ஆம் தேதி இந்திய சீனா எல்லையில் மிகப்பெரிய மோதல் சம்பவம் . இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.சீன தரப்பில் 55 க்கும் மேற்பட்ட வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தில் இந்தியாவின் கர்னல் சந்தோஷ் பாபுவும் வீரமரணம் அடைந்தார். இவர் சொந்த ஊர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சூர்யாபேட்டை ஆகும். இறுதி ஊர்வலம் மற்றும் இறுதி சடங்குகள் சொந்த ஊரான சூர்யா பேட்டையில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
இந்நிலையில் கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், அப்போது அரசின் நிவாரணத் தொகையில் ஒரு பகுதியாக 5 கோடி ரூபாய்க்ககான சோலையை வழங்கினார். மேலும் அவரது மனைவிக்கு துணை ஆட்சியர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது பேசிய தெலங்கானா முதல்வர், “சந்தோஷ் பாபுவின் சொந்த ஊரான சூர்யாபேட்டையில் அரசு சார்பாக அவருக்கு உருவச் சிலை அமைக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.
அவரது உருவச் சிலையை செய்யும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கர்னல் சந்தோஷ் பாபுவின் உருவச் சிலையை நிறுவ, சூர்யாபேட்டை பேருந்து நிலையம் அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.